பண்ருட்டி நகராட்சிநிர்வாகத்தை கண்டித்து போராட்டம்... பொதுநல அமைப்பு அறிவிப்பு!
Protest against the Panrutti municipality administrationPublic welfare organization announcement
வருகின்ற 22 ஆம் தேதி அன்று பண்ருட்டி நகராட்சி அலுவலகத்தை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று பொதுநல அமைப்பு அறிவித்துள்ளது.
பண்ருட்டி வட்ட பொதுநல அமைப்பு சார்பில் ஆலோசனையோ கூட்டம் நடைபெற்றது.அப்போது கூட்டத்தில் தெரிவித்தாவது:பண்ருட்டி நகராட்சிக்கு நிரந்தர ஆணையரை உடனடியாக நியமிக்க வேண்டும்! நகர வளர்ச்சி திட்டங்கள் நிறைவேற்றப்படாமல் தாமதமாகியுள்ளது. நிரந்தர ஆணையர் இல்லாமையின் காரணமாக, நகரத்தின் முக்கிய திட்டங்கள் கிடப்பில் உள்ளன.தாமதமின்றி நகர மக்கள் தேவைகள் நிறைவேற்றப்பட வேண்டும்!
சாலை, கழிவுநீர் வடிகால், போக்குவரத்து வசதிகள் போன்ற அடிப்படைப் பிரச்சனைகள் தீர்க்கப்பட வேண்டும்.முன்னதாக மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில் RDO தலைமையிலான கூட்டத்தில்,
நகராட்சி ஆணையர் போக்குவரத்து காவல்துறை நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள்
முன்னிலையில் தீர்மானிக்கப்பட்ட கோரிக்கைகள் 15 நாட்களுக்குள் நிறைவேற்றப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால் இன்றுவரை எந்த நடவடிக்கையும் இல்லை!
மக்கள் உரிமைக்காக... நகர வளர்ச்சிக்காக... உடனடி செயல் தேவை!பண்ருட்டி நகராட்சிக்கு தற்போது உள்ள கூடுதல் பொறுப்பேற்றுள்ள ஆணையர் அவர்களை பொதுமக்கள் நேரில் சந்தித்து எந்த பிரச்சினைக்கும் தீர்வு ஏற்படுத்த முடியவில்லை- ஆகையால் ஏற்கனவே முன்மொழிந்து உள்ள தீர்மானங்களின்
கோரிக்கையை நிறைவேற்ற வில்லை என்றால் வருகின்ற 22 ஆம் தேதி அன்று பண்ருட்டி நகராட்சி அலுவலகத்தை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என அவசர ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது என்றுபண்ருட்டி வட்ட பொதுநல அமைப்பின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளார்கள்.
English Summary
Protest against the Panrutti municipality administrationPublic welfare organization announcement