10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு சாதனை மாணவர்களுக்குப் பரிசளிப்பு!
Prize distribution for students who excelled in the 10th and 12th grade public examinations
முத்தமிழ்க் கூடல் இல்லத்தில் நடைபெற்ற 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதித்த மாணவர்களுக்குப் பரிசளிப்பு விழாவில் சட்டப் பேரவைத் தலைவர் ஏம்பலம் செல்வம் கலந்துகொண்டு பரிசளித்துப் பாராட்டுரை வழங்கினார்.
புதுச்சேரி நலப்பணிச் சங்கத்தின் சார்பில் பாகூரை அடுத்துள்ள சோரியங்குப்பம் முத்தமிழ்க் கூடல் இல்லத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதித்த மாணவர்களுக்குப் பரிசளிப்பு விழா நடைபெற்றது.
புதுச்சேரி நலப்பணிச் சங்கத்தின் தலைவர் நல்லாசிரியர் முனைவர் வெற்றிவேல் தலைமையில் நடைபெற்ற விழாவில் பாகூர் ஆசிரியர் வேணுகோபால், ஆலோசகர்கள் வட்டாட்சியர் ஐயனார் வரலாற்று விரிவுரையாளர் முத்துஐய்யாசாமி முன்னிலை வகித்தனர். துணைத் தலைவர் நந்தகோபால் வரவேற்புரை வழங்கினார். பட்டதாரி ஆசிரியர் தனராஜா, மகளிர் அமைப்பாளர் விஜயலட்சுமி, வர்ம மருத்துவர் முருகானந்தம் வாழ்த்துரை வழங்கினர்.

சிறப்பு விருந்தினராக புதுச்சேரி சட்டப் பேரவைத் தலைவர் ஏம்பலம் செல்வம் கலந்துகொண்டு 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதித்த மாணவர்களுக்குப் பரிசளித்துப் பாராட்டுரை வழங்கினார். துணைச் செயலர் இரமேஷ் நன்றி கூறினார்.
English Summary
Prize distribution for students who excelled in the 10th and 12th grade public examinations