தனியார் பள்ளிகளில், இலவச திட்டத்தில் சேர்த்த மாணவர்களின் கட்டணம் குறைப்பு.. கவலையில் தனியார் பள்ளிகள்..! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தில், இலவச சேர்க்கைக்கான மாணவர் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.

தனியார் பள்ளிகளில், 25 சதவீத இடங்களில், தமிழக அரசின் இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் எல்.கே.ஜி., முதல் 8ம் வகுப்பு வரை, கல்வி கட்டணமின்றி மாணவர்கள் படிக்கலாம். எல்.கே.ஜி.,யில் சேர்க்கப்படும் மாணவர்கள், ஒரே பள்ளியில் 8ம் வகுப்பு வரை படிக்கும்போது மட்டுமே இந்த சலுகையை பெற முடியும் என்பதால், தமிழக அரசு  ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தை நிர்ணயித்து, அந்த கட்டணம் அரசின் சார்பில் தனியார் பள்ளிகளுக்கு வழங்கப்படுகிறது.

இந்நிலையில், கடந்த ஆண்டு சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கான கட்டணம் புதிதாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதால், எல்.கே.ஜி., முதல் 5ம் வகுப்பு வரை, ஒவ்வொரு மாணவருக்கும், 12 ஆயிரத்து 76 ரூபாய்; 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை, 15 ஆயிரத்து 711 ரூபாய் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த கட்டணத் தொகையானது, கடந்த முறை நிர்ணயித்த தொகையை விட இந்தாண்டு குறைவு. கடந்த ஆண்டைவிட, 382 ரூபாயில் இருந்து 1,395 ரூபாய் வரை கல்வி கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதனால், இலவச திட்டத்தில் மாணவர்களை சேர்த்த தனியார் பள்ளிகள் கவலை அடைந்துள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

private schools, fee reduction of people enrolled in the free program


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->