தேனி : மாணவிக்கு பாலியல் தொல்லை... தனியார் பள்ளி ஆசிரியர் உட்பட 2 பேர் கைது..! - Seithipunal
Seithipunal


தேனி மாவட்டத்தில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தனியார் பள்ளி ஆசிரியர் உட்பட இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.

தேனி மாவட்டம் வளையப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பகவதிராஜ் (50). இவர் முத்துத்தேவன்பட்டி பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரும் வளையப்பட்டியை சேர்ந்த முனியாண்டி (60) என்பவரும் பதினோரு வயதுடைய பள்ளி மாணவிக்கு தனித்தனியாக பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர். இதைத்தொடர்ந்து மாணவி இதுகுறித்து தாயிடம் கூறியுள்ளார்.

இந்நிலையில் மாணவியின் தாய் இந்த சம்பவம் குறித்து தேனி மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு முனியாண்டி மற்றும் தனியார் பள்ளி ஆசிரியரான பகவதிராஜை கைது செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Private school teacher including 2 arrested for sexually harassing a 11 year old school girl in theni


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமா?Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமா?
Seithipunal
--> -->