மயிலாடுதுறையில் தனியார் பள்ளிக்கு விடுமுறை - நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள செம்மங்குளத்தில் குடியிருப்பு பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இது தொடர்பான சிசிடிவி காட்சிகளும் தற்போது வெளியாகியுள்ளன. 

சிறுத்தை நடமாட்டத்தால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். இந்த நிலையில், சிறுத்தை நடமாட்டம் காரணமாக பொதுமக்கள் வெளியே வரவேண்டாம் என்று போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். 

மேலும், சிறுத்தை தென்பட்டால் 9360889724 என்ற எண்ணை அழைத்து தெரியப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், சிறுத்தை நடமாட்டம் காரணமாக செம்மங்கரையில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

private school holiday in mayiladuthurai for cheetah movement


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->