தேனி || இருசக்கர வாகனம் இது தனியார் பேருந்து மோதி விபத்து.! ஒருவர் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


தேனியில் இருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தேனி மாவட்டம் பழனிசெட்டிப்பட்டி அண்ணாநகரை சேர்ந்தவர் கோபிநாத் (வயது 33). இவர் வத்தலகுண்டுவிலிருந்து தேனி நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

அப்பொழுது பெரியகுளம் நந்தியாபுரம் கம்மாய் அருகே, சென்றபோது அவ்வழியாக வந்த தனியார் பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.

இதில் படுகாயம் அடைந்த கோபிநாத்தை சிகிச்சைக்காக பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு கோபிநாத் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து உள்ளார்.

இதையடுத்து இந்த விபத்து குறித்து பெரியகுளம் வடகரை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Private bus twowheeler accident in theni


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->