உடனே அலர்ட் ஆகுங்க...! பிஎஃப் கணக்கு வச்சிருக்கீங்களா...? 3 நாட்களுக்கு 'லாக்' ஆகும் EPFO போர்டல்...!
Be alerted immediately Do you have PF account EPFO portal locked 3 days
வருங்கால வைப்பு நிதி தொகையை திரும்பப் பெறுதல், முன்பணம் பெறுதல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்காக கோடிக்கணக்கான சந்தாதாரர்கள் EPFO இணையதள சேவைகளை தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர்.
இதனால், சேவைகளை மேலும் விரைவாகவும், பாதுகாப்பாகவும், தடையற்ற முறையிலும் வழங்கும் நோக்கில் EPFO தனது கணினி மற்றும் தொழில்நுட்ப கட்டமைப்பை மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது.

இந்த மேம்பாட்டு பணிகள் காரணமாக EPFO இணையவழிச் சேவைகள் தற்காலிகமாக மூன்று நாட்களுக்கு நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மென்பொருள் மற்றும் தொழில்நுட்ப பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று முதல் வருகிற 28-ஆம் தேதி வரை EPFO போர்டல் வழியாக வழங்கப்படும் அனைத்து முக்கிய சேவைகளும் செயல்படாது.
இதன் காரணமாக புதிய PF கோரிக்கைகள், முன்பண விண்ணப்பங்கள், கணக்கு பரிமாற்றம் உள்ளிட்ட சேவைகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க இயலாது.
ஆனால் ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்ட கோரிக்கைகள் ரத்து செய்யப்படமாட்டாது என்றும், அவை வழக்கம்போல பரிசீலனை செய்யப்படும் என்றும் EPFO தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அவசர தேவைகளுக்காக குறுந்தகவல் சேவை, மிஸ்டு கால் வசதி (9966044425), உதவி எண் (14470), மற்றும் வாட்ஸ்அப் சேவைகள் மூலம் தொடர்புகொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Be alerted immediately Do you have PF account EPFO portal locked 3 days