இன்று வெளுத்து வாங்கப்போகும் மழை...லிஸ்ட்டில் சென்னை உள்பட 12 மாவட்டங்கள்...! - வானிலை மையம் அதிரடி எச்சரிக்கை...! - Seithipunal
Seithipunal


சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிவிப்பின்படி, தமிழக கடலோரப் பகுதிகளை ஒட்டி சுமார் 0.9 கிலோமீட்டர் உயரத்தில் காற்றழுத்த தாழ்வு பாதை நிலவி வருகிறது. இதன் தாக்கத்தால் அடுத்த சில நாட்களுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இன்று (26-06-2026):
தமிழகத்தின் பல இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை,திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு,  திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்யக்கூடும்.
நாளை (27-06-2026):
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பரவலாக மழை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட வடமாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும். அதேசமயம் கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
நாளை மறுநாள் (28-06-2026):
விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
29-06-2026:
தென் மற்றும் மேற்கு மாவட்டங்களில் மழை தீவிரம் அதிகரிக்கக்கூடும். குறிப்பாக விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
30-06-2026:
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை தொடரக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர் மற்றும் தேனி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
01-07-2026:
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை நீடிக்கக்கூடும்.
வெப்பநிலை நிலவரம்:
26-06-2026 முதல் 29-06-2026 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றம் இருக்காது. வெப்பநிலை இயல்பை ஒட்டியே காணப்படும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை நிலவரம்:
இன்று சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38 முதல் 39 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 முதல் 29 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Heavy rain expected today12 districts including Chennai list Meteorological Department issues warning


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->