நகை வாங்கப் போறீங்களா...? சற்றே எகிறிய தங்கம் விலை...! - இன்றைய ரேட் என்ன...? - Seithipunal
Seithipunal


தங்கம் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து சரிவை சந்தித்து வந்த நிலையில், இன்று மீண்டும் ஏற்றம் கண்டுள்ளது. குறிப்பாக ஜூன் 17 முதல் இடையறாத சரிவில் இருந்த தங்கம், நகை வாங்க திட்டமிட்டிருந்தவர்களுக்கு சற்றே நிம்மதியை அளித்திருந்தது.

கடந்த இரண்டு நாட்களில் தங்கம் விலையில் கணிசமான வீழ்ச்சி பதிவானது. நேற்று முன்தினம் ஒரு கிராமுக்கு ரூ.210 குறைந்ததுடன், சவரனுக்கு ரூ.1,680 வரை சரிந்தது.

அதேபோல் நேற்றும் அதே அளவிலான வீழ்ச்சி தொடர்ந்தது.அதன்படி, நேற்று முன்தினம் ஒரு கிராம் தங்கம் ரூ.13,350-க்கும், ஒரு சவரன் ரூ.1,06,800-க்கும் விற்பனையானது. தொடர்ந்து நேற்றைய வர்த்தக நிலவரப்படி, மேலும் கிராமுக்கு ரூ.210 குறைந்து ரூ.13,140-க்கும், சவரனுக்கு ரூ.1,680 குறைந்து ரூ.1,05,120-க்கும் விற்பனையானது.
இன்று தங்கம் விலை உயர்வு
இந்த நிலையில், சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.1,05,760-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் கிராமுக்கு ரூ.80 அதிகரித்து ரூ.13,220-க்கு விற்பனையாகிறது.
வெள்ளி விலையும் ஏற்றம்
தங்கத்தின் பாதையைப் போலவே வெள்ளி விலையும் இன்று உயர்வை பதிவு செய்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.5 உயர்ந்து ரூ.235-க்கு விற்பனை செய்யப்படுகிறது. பார் வெள்ளி விலை ரூ.2,35,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.தொடர்ச்சியான சரிவுக்கு பிறகு இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் இரண்டிலும் ஏற்பட்டுள்ள ஏற்றம், நகை சந்தையில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Are you going to buy jewelry Gold prices have risen slightly What today rate


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->