PFI அமைப்புடன் தொடர்பா? உள்ளே நடந்தது என்ன? சிறைத்துறை சொன்ன அதிர்ச்சி தகவல்!! - Seithipunal
Seithipunal


சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய விவகாரத்தில் காவல்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள கருக்கா வினோத் கடந்து அக்டோபர் 21ஆம் தேதி மற்றொரு வழக்கில் சிறையிலிருந்து ஜாமினில் விடுதலையான போது இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள பி.எஃப்.ஐ அமைப்பனுடன் விடுதலையானது பல்வேறு சந்தேகங்களை எழுப்பி உள்ள நிலையில் இது தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை தொடங்கியுள்ளது.

இந்த நிலையில் தமிழ்நாடு சிறைத்துறை சார்பில் கருக்கா வினோத் விடுதலை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஜாமீனில் வெளியே வருபவர்கள், சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டவர்கள் என அனைவரும் பரிசோதனைக்கு பிறகு ஒரே நேரத்தில் விடுவிக்கப்படுவது வழக்கம். சிறையில் இருந்த போது கருக்கா வினோத் அடைக்கப்பட்டிருந்த இடம் வேறு, பி.எஃப்.ஐ வழக்கில் கைதானவர்கள் அடைக்கப்பட்டிருந்த இடம் வேறு.

சிறையில் வெவ்வேறு இடங்களில் அடைக்கப்பட்டு இருந்ததால் இரு தரப்பினரும் சந்திக்க வாய்ப்பு இல்லை. கருக்கா வினோத் சிறையில் இருந்த நாட்களில் அவரை சந்திக்க அவரது குடும்பத்தினரோ, உறவினர்களோ, மற்ற யாரும் வந்ததற்கான பதிவு இல்லை" என தமிழ்நாடு சிறைத்துறை விளக்கம் அளித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Prison dept explanation about Karukka Vinoth


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->