மதுரையில் தமிழக வெற்றிக் கழக 2-வது மாநில மாநாடு - அறிவித்தார் விஜய்!
Vijay Tamilaga Vettri Kazhagam madurai manadu
தமிழக வெற்றிக் கழக 2-வது மாநில மாநாடு மதுரையில் நடைபெறும் அக்கட்சியின் தலைவர் விஜய் இன்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்த அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
"என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழக மக்களுக்கும், கழகத் தோழர்களுக்கும் வணக்கம்.
தமிழக அரசியல் களத்தின் முதன்மை சக்தியான தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு, வருகிற ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி (25.08.2025) திங்கட்கிழமை அன்று மதுரையில் நடைபெற உள்ளது என்பதை அறிவிப்பதில் மகிழ்கிறேன்.
வாகை சூடும் வரலாறு திரும்பட்டும். வெற்றி நிச்சயம்" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Vijay Tamilaga Vettri Kazhagam madurai manadu