மீண்டும் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி - எப்போது தெரியுமா?
prime minister modi again come in tamilnadu
பாரத பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக கடந்த 26-ந்தேதி இரவு தமிழகத்திற்கு வந்தார். அப்போது, தூத்துக்குடி சர்வதேச விமான நிலையத்தில் புதிய முனையத்தையும், மறுநாளான 27-ந்தேதி கங்கைகொண்ட சோழபுரத்தில் முதலாம் ராஜேந்திர சோழனின் 1000-வது பிறந்தநாள் விழா கொண்டாட்டத்திலும் கலந்து கொண்டு ரூ.4,800 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார்.

இந்த நிலையில், அடுத்த மாதம் 26-ந்தேதி பிரதமர் மோடி மீண்டும் தமிழகத்திற்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, மீண்டும் தமிழகத்திற்கு வரும் பிரதமர் மோடி திருவண்ணாமலை மற்றும் சிதம்பரம் மாவட்டத்திற்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிதம்பரம் நடராஜன் கோவிலில் இருந்து மனதின் குரல் நிகழ்ச்சி மூலம் நேரலையில் நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார். இதைத் தொடர்ந்து செப்டம்பர் மாத இறுதியிலும் பிரதமர் மோடி தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதமரின் தமிழகம் வருகை தமிழகத்தின் பெருமையை உலகம் முழுவதும் எடுத்துக் காட்டுகிறது.
English Summary
prime minister modi again come in tamilnadu