வடகிழக்கு பருவ மழையை தயார்..மாவட்ட ஆட்சியர் தலைமையில் அதிகாரிகள் ஆலோசனை!
Prepare for the northeast monsoon Officials meeting under the leadership of the district collector
வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில் மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் தலைமையில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் ஆட்சியர் வளாகத்தில் இன்று காலை நடைபெற்றன.
இக்கூட்டத்தில் சார்பு ஆட்சியர்கள் இசிட்டா ரதி, முதுநிலை காவல் கண்காணிப்பாளர் நித்யா ராதாகிருஷ்ணன் மற்றும் காவல்துறை. நகராட்சி நிர்வாகம், மின்துறை, பொதுப்பணித்துறை, தீயணைப்பு துறை, வேளாண் துறை. கல்வித்துறை, மீண் வளத்துறை. அனைத்து கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர்கள் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொண்டார்கள்.
செப்டம்பர் மாத இருதிக்குள் புதுவையில் உள்ள அனைத்து வாய்க்கால்களையும் தூர் வார வேண்டும் எனவும் குறிப்பாக நகர்ப்புறங்களில் சென்ற பருவ மழையின் போது மழை நீர் தேக்கம் ஏற்பட்ட இடங்களில் வாய்க்கால்களை தூர்வாரி பிளாஸ்டிக் கழிவுகளை அப்புறப்படுத்த கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் எனவும் புதுவையில் உள்ள அனைத்து குடிநீர் தொட்டிகளையும் சுத்தம் செய்ய வேண்டும் எனவும் மேலும் மழைக் காலங்களில் கூடுதல் மோட்டார் பம்புகள் தயார் நிலையில் வைக்க வேண்டும் எனவும் பொதுமக்களுக்கு சுத்தமான குடியிர் விநியோகம் செய்ய வேண்டும் படியும் குடிநீரில் தேவையான அளவு
குளோரின் கலந்து பொதுமக்களுக்கு விநியோகக்க வேண்டும் எனவும் அனைத்து குடிநீர் தொட்டிகளிலும் ஆபரேட்டர்களை பணியமர்த்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்ட ஆட்சியர் அவர்கள் 24 மணி நேரமும் அரசு ஊழியர்கள் பணியில் இருக்க வேண்டும் எனவும் சென்ற முறை நீர் தேங்கிய கிருஷ்ணா நகர், ரெயின்போ நகர், வெங்கடா நகர் மற்றும் பூமியான் பேட்டை உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் வாய்க்கால்களை தூர்வாரி மீண்டும் நீர் தேங்காத அளவிற்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பொதுப்பணித்துறை உள்ளிட்ட சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்கள். பொதுப்பணித்துறை அதிகாரிகள் புதுவை அருகில் உள்ள சாத்தனூர் மற்றும் வீடுர் டேம்கள் திறக்கும் பொழுது புதுவையின் கரையோரம் உள்ள கிராம மக்கள் பாதிக்காத வகையில் தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் தொடர்பு நிலையில் இருக்க வேண்டும் என கேட்டு கொண்டார்கள். மேலும் அனைத்து வாய்க்காலிலும் குறிப்பாக நகர்ப்புற வாய்க்கால்களில் அடைபட்டு உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை போர்க்கால அடிப்படையில் சுத்தம் செய்து மழைக் காலங்களில் மழைநீர் அடைப்பு ஏற்படாமல் பொதுப்பணித்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் பணியில் ஈடுபட வேண்டும் என ஆட்சியர் அவர்கள் அறிவுருத்தினார்கள்.
மேலும் பொதுப்பணித்துறை மூலம் 25 ஆயிரம் மணல் மூட்டைகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் எனவும் மேலும் கூடுதல் மணல் மூட்டைகள் வைத்துக்கொள்ள வேண்டும் எனவும் ஆட்சியர் அவர்கள் பொதுப்பணித்துறை அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்கள். மேலும் அனைத்து கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர்கள் புதுவையில் உள்ள அனைத்து ஏரிகளையும் கண்காணிக்க வேண்டும் எனவும் வனத்துறை அதிகாரிகள் மழைக்காலங்களில் ஒவ்வொரு தாலுகா விற்கும் ஒரு பாம்பு பிடிப்பவரை பணியில் அமர்த்த வேண்டும் எனவும் பொதுமக்கள் போன் செய்தால் உடனடியாக சம்பந்தப்பட்ட இடத்திற்கு செல்ல கேட்டுக் கொண்டார்கள். மேலும் வனத்துறை மூலம் மின்கம்பங்கள் அருகிலோ அல்லது தாழ்வான பகுதியில் பாதிப்பு ஏற்படும் வகையில் உள்ள மரக்கிலைகளை அப்புறப்படுத்த வேண்டும் எனவும் தீயணைப்பு துறை அதிகாரிகள் போதுமான பாதுகாப்பு உபகரணங்களை தயார் நிலையில் வைத்துக் கொள்ள கேட்டுக் கொண்டார்கள்.
மேலும் சுகாதாரத் துறை மூலம் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களும் தயார் நிலையில் இருக்க வேண்டும் எனவும் போதுமான மருந்து மாத்திரைகள் தேவையான ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவ குழுக்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் எனவும் ஆட்சியர் அவர்கள் சுகாதாரத்துறை அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்கள். மேலும் மின்துறை அதிகாரிகள் தாழ்வான பகுதிகளின் உள்ள மின் ஒயர்களை சரி செய்ய வேண்டும் எனவும் போதுமான மின்கம்பங்கள் மற்றும் சாலை விளக்குகள் போர்க்கால அடிப்படையில் தயார் நிலையில் இருக்கும்படி ஆட்சியர் அவர்கள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்கள். மேலும் குடிமைப் பொருள் வழக்கு துறை மூலம் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மழைக்காலங்களில் பள்ளிகளிலோ அல்லது அங்கன்வாடிகளிலோ தங்கும் போது அவர்களுக்கு தரமான உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் எனவும் கல்வித்துறை அதிகாரிகள் அனைத்து பள்ளிகளையும் தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்கள். மேலும் பொதுமக்கள் மழைக்காலங்களில் தொலைபேசி மூலமோ அல்லது நேரடியாகவோ கேட்கும் அனைத்து உதவிகளுக்கும் அரசு அதிகாரிகள் உரிய நேரத்தில் செய்து தர வேண்டும் எனவும் அவர்கள் தொலைபேசியில் தொடர்பு கொள்ளும் போது அரசு அதிகாரிகள் தகுந்த பதில்களை அளிக்க வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் கேட்டுக் கொண்டார்கள்.
மேலும் புதுவைப் பகுதிகளில் அனுமதி பெறாமல் பாதுகாப்பற்ற நிலையில் வைக்கப்பட்டுள்ள அனைத்து பேனர்களையும் அப்புறப்படுத்த வேண்டும் என ஆட்சியர் அவர்கள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை அறிவுறுத்தினார்கள். மேலும் அனைத்து துறை அதிகாரிகளும் ஒன்றிணைந்து பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படா வண்ணம் வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள வேண்டும் என ஆட்சியர் அவர்கள் கேட்டுக் கொண்டார்கள். மேலும் செப்டம்பர் 11 அன்று நடைபெறும் சுனாமி பேரிடர் ஒத்திகை நிகழ்ச்சியில் அனைத்து துறைகளும் கலந்து கொண்டு சிறப்பாக நடைபெற ஒத்துழைக்க வேண்டும் என கூட்டத்தில் ஆட்சியர் அறிவுறுத்தினார்.
English Summary
Prepare for the northeast monsoon Officials meeting under the leadership of the district collector