பொங்கல் பண்டிகைக்கான இரயில் டிக்கெட் முன்பதிவு இன்று முதல் தொடக்கம்.! - Seithipunal
Seithipunal


பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரெயிலில் முன்பதிவு இன்று காலை 8 மணி முதல் தொடங்குகிறது.

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 15-ந் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதைதொடர்ந்து பயணிகள் வசதிக்காக ரெயில் டிக்கெட் முன்பதிவு நாளை தொடங்குகிறது.

அடுத்த ஆண்டு ஜனவரி 10-ந் தேதி பயணிக்க விரும்புபவர்கள் இன்று டிக்கெட்களை முன்பதிவு செய்யலாம். ஜனவரி 11-ந் தேதி பயணம் செய்ய விரும்புபவர்கள் மறுநாள் (13-ந் தேதி) முன்பதிவு செய்யலாம்.

ஜனவரி மாதம் 12-ந் தேதி பயணம் செய்ய விரும்புபவர்கள் வருகிற 14-ந் தேதியும், ஜனவரி 13-ந் தேதி ரெயில் பயணத்தை மேற்கொள்ள விரும்புபவர்கள் வருகிற 15-ந் தேதியும் டிக்கெட்களை முன்பதிவு செய்து கொள்ளலாம். பொங்கலுக்கு முந்தைய நாளான ஜனவரி 14-ந் தேதி பயணம் செல்பவர்கள் வருகிற 16-ந் தேதியும் பொங்கல் அன்று (ஜனவரி 15-ந் தேதி) பயணிப்பவர்கள் வருகிற 17-ந் தேதியும்  முன்பதிவு செய்யலாம் என தெற்கு இரயில்வே அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Pongal festival ticket booking from today


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->