புரியாமல் திகைக்கும் காவலர்கள்! காவல் நிலையத்திலேயே ஒருவர் தன்னைத்தானே மாய்த்துக்கொண்ட அதிர்ச்சி...!
police stunned man committed suicide police station
கோவை மாவட்டம் பெரிய கடைவீதியில் காவல்நிலையம் ஒன்றுள்ளது. அதன் முதலாவது மாடியில் இருக்கும் குற்றம் உதவி ஆய்வாளர் அறையில் ஒருவர் தன்னைத் தானே மாய்த்துக் கொண்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி அக்கம் பக்கத்துக்கு மக்களை அதிர வைத்துள்ளது.

மேலும் அங்கு தற்கொலை செய்து கொண்ட நபர், நேற்று இரவு 11 மணி அளவில் காவல் நிலையத்திற்குள் நுழைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.இந்த சம்பவம் குறித்த முழு விவரம் எதுவும் தற்போது வரை வெளியாகவில்லை.
மேலும் அந்த நபர் எந்த காரணத்துக்காக காவல்நிலையத்திற்கு வந்தார் என்பது குறித்த தகவல்களும் வெளியாகவில்லை.இந்த நிகழ்வு குறித்து தகவலறிந்து வந்த தடயவியல் நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் காவலர்கள் வழக்கு பதிவு செய்து மேற்கட்ட விசாரணை நடத்தி வருகின்றனர்.ஆனால் தற்கொலை செய்து கொண்டவரின் பெற்றோர் பற்றிய தகவல் இன்னும் வெளிவரவில்லை.
English Summary
police stunned man committed suicide police station