சேலம் : காதலிக்கு விருப்பமில்லாமல் வேறொருவருடன் திருமணம் - காதலன் எடுத்த அதிரடி முடிவு.!!
police stopped marriage for bride not interested in salem
சேலம் : காதலிக்கு விருப்பமில்லாமல் வேறொருவருடன் திருமணம் - காதலன் எடுத்த அதிரடி முடிவு.!!
சேலம் மாவட்டத்தில் உள்ள சோமம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் லோகநாதன். பட்டதாரியான இவருக்கும் மின்னாம்பள்ளியைச் சேர்ந்த சுவேதா என்பவருக்கும் திருமணம் நிச்சயம் செய்தபடி நேற்று காலை திருமணம் நடைபெற இருந்தது. இந்த நிலையில், சுவேதாவை கட்டாயப்படுத்தி திருமணம் செய்துவைப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அந்த தகவலின் பேரில் போலீசார் விரைந்து வந்து திருமண மண்டபத்தில் இருந்த மணப்பெண் சுவேதாவிடம் விசாரணை செய்தனர். அதில் ஸ்வேதா வேறொரு நபரை மூன்று ஆண்டுகளாக காதலிப்பதும், இந்த திருமணத்தில் அவருக்கு விருப்பமில்லாததும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் சுவேதாவையும், காதலன் கவியரசனையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றார். அதன் பின்னர் போலீசார் இருவரிடமும் விசாரணை நடத்தி சேர்த்து வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தெரிவித்ததாவது, “கவியரசன், சுவேதா இருவரும் ஒரே பகுதியைச் சேர்ந்தவர்கள்.
இவர்கள் இருவரும் மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இதற்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்து ஸ்வேதாவை வேறு ஒருவருடன் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். இதில் விருப்பமில்லாத ஸ்வேதா திருமணம் நடைபெறவிருந்த நிலையில் காதலன் கவியரசனை தொடர்பு கொண்டு திருமணத்தில் விருப்பமில்லை என்று தெரிவித்துள்ளார்.
இதைக்கேட்ட கவியரசன் போலீசில் புகார் அளித்தார். அதன் படி திருமணத்தை நிறுத்தி அவரது விருப்பத்துடன் காதலனுடன் சேர்த்து வைத்தோம்” என்றுத் தெரிவித்தனர்.
English Summary
police stopped marriage for bride not interested in salem