வெள்ளத்தில் சிக்கிய குடும்பத்தை பத்திரமாக மீட்ட காவல் அதிகாரி: வைரலாகும் புகைப்படம்!
police rescued family trapped rain flood
மிக்ஜம் புயல் காரணமாக சென்னையில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வந்தது. இதனால் சென்னை முழுவதும் மழை நீர் தேங்கி வெள்ளைக்காடாக மாறியது.
சென்னையில் மீட்பு பணிகளும் நிவாரண பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வட சென்னை மற்றும் தென் சென்னை பகுதிகளில் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் வெள்ளத்தை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மாதவரம், மணலி, எண்ணூர், தாம்பரம், வேளச்சேரி, பெரும்பாக்கம், மடிப்பாக்கம், பள்ளிக்கரணை போன்ற பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான வீடுகளில் வெள்ளம் சூழ்ந்து அபாயகரமான நிலையில் உள்ளது.

இதனால் அந்த பகுதியில் உள்ளவர்களை படகுகள் மூலம் மீட்பு குழு 3 வது நாளாக இன்றும் தீவிரமாக மீட்டு வருகிறது. இந்நிலையில் மழை வெள்ளத்தில் சிக்கிய குடும்பத்தினரை போலீஸ் ஒருவர் பத்திரமாக மீட்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வரலாகி வருகிறது.
இந்த புகைப்படத்தில் காவலர் ஒருவர் குழந்தையை தூக்கிக்கொண்டு புன்னகையுடன் கொஞ்சியபடி நடந்து வரும் காட்சி பதிவாகியுள்ளது.
English Summary
police rescued family trapped rain flood