அரியலூரில் பரபரப்பு - தற்கொலைக்கு முயன்ற போலீஸ் ஏட்டு - காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


அரியலூர் மாவட்டத்தில் உள்ள உடையார்பாளையம் அருகே பிளாக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் பாண்டியன். தா.பழூர் காவல் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வரும் இவருடைய மனைவி வேம்பு. இந்த தம்பதியினருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில், நேற்று காலை ஒன்பது மணியளவில் வீட்டில் இருந்த பாண்டியன் எறும்பு மருந்து தின்று விட்டதாக உறவினர்களிடம் தெரிவித்து விட்டு மயங்கி விழுந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் அவரை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இந்த சம்பவம் குறித்து அவரது மனைவி வேம்பு பேசியதாவது, பாண்டியன் கடந்த 4 நாட்களாக வீட்டிற்கு வராமல் தொடர்ந்து பணியில் ஈடுபட்டு வந்ததாகவும், பணிச்சுமை காரணமாக அவரால் சரியாக குடும்ப பொறுப்புகளை கவனிக்க முடியாத நிலையில் மன உளைச்சல் ஏற்பட்டு இது போன்ற முடிவுக்கு வந்து இருக்கலாம்" என்று தெரிவித்தார். 

இதைத் தொடர்ந்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எறும்பு மருந்து தின்று போலீஸ் ஏட்டு தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

police officer sucide attempt in ariyalur


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->