நெய்வேலியில் பஸ்சில் கடத்தி வந்த 21 கிலோ கஞ்சா பறிமுதல்: பெண் உள்பட 06 பேர் கைது..!
21 kilograms of ganja smuggled in a bus were seized in Neyveli and 6 people were arrested
வெளி மாநிலங்களில் இருந்து கடத்திவரப்படும் கஞ்சா, நெய்வேலி பகுதியில் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதனை தொடர்ந்து நெய்வேலி பகுதியில், போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
அதன்படி, நேற்று நெய்வேலி ஆர்ச் கேட் பகுதியில் பஸ்சில் இருந்து 21 கிலோ கஞ்சா மூட்டை எடுத்து வந்த பெண் உள்ளிட்ட 06 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், ஒடிசாவை சேர்ந்த அபிலாஷ் குரு (28), அலிசா (24), மந்தாரக்குப்பம் பகுதியை சேர்ந்த குட்டி தேவா (24), சுதாகர் (27), கடலூரை சேர்ந்த ஜீவா (25), சந்துரு (26) என தெரிய வந்துள்ளது.
கைது செய்யப்பட்ட இவர்கள் ஒடிசா மாநிலத்தில் இருந்து ரயில் மூலம் கஞ்சாவை கடத்தி வந்ததாக தெரிவித்துள்ளது. குறித்த கஞ்சனாவை நெய்வேலி பகுதிக்கு பஸ்சில் எடுத்து வந்து விற்பனை செய்ய இருந்தது தெரிய வந்துள்ளது. இதையடுத்து 06 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 03 செல்போன்கள், 21 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.
English Summary
21 kilograms of ganja smuggled in a bus were seized in Neyveli and 6 people were arrested