தமிழ்நாட்டைச் சேர்ந்த 11 பேருக்கு பத்ம ஸ்ரீ விருதுகள்; மலையாள நடிகர் மம்முட்டிக்கு பத்ம பூஷன் விருது அறிவிப்பு..! - Seithipunal
Seithipunal


பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களை கௌரவிக்கும் வகையில் இந்திய அரசின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதுகள் பத்ம விபூஷன்,  பத்ம பூஷன் மற்றும் பத்ம ஸ்ரீ ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகின்றன.

குறிப்பாக, கலை, இலக்கியம், அறிவியல், மருத்துவம், விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை புரிவோருக்கு இந்த விருதுகள் வழங்கப்படுகிறது.

ஆண்டுதோறும் குடியரசு தினத்தை முன்னிட்டு பத்ம விருதுகள் அறிவிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், 2026ம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் இன்று அறிவிக்கபட்டது. இதில் சினிமாவில் (கலை) மலையாள நடிகர் மம்முட்டிக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மறைந்த முன்னாள் ஜார்க்கண்ட் முதல்வர் ஷிபு சோரனுக்கு 'பத்ம பூஷன்' விருதும், மறைந்த பிரபல பாலிவுட் நடிகர் தர்மேந்திர சிங் தியோலுக்கு ]பத்ம விபூஷண்' விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் ஷர்மா, வீராங்கனை ஹர்மன்பிரீத் கவுர் ஆகியோருக்கு 'பத்ம ஸ்ரீ விருது' அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த 11 பேருக்கு பத்ம ஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. திருவாரூரைச் சேர்ந்த மிருதங்க வித்வான் பக்தவச்சலம், சேலத்தைச் சேர்ந்த ராஜஸ்தபதி கலியப்ப கவுண்டர் உட்பட 11 பேருக்கு பத்ம ஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Malayalam actor Mammootty announced as a recipient of the Padma Bhushan award


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?


செய்திகள்



Seithipunal
--> -->