போதையில் விடுதிக்கு வந்ததாக தந்தைக்கு வீடியோ அனுப்பிய வார்டன்; 04வது மாடியில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை: ஆத்திரத்தில் சக மாணவர்கள்கள் செய்ய செயல்..!
A student committed suicide by jumping from the 4th floor after the warden sent a video to his father showing the student arriving at the hostel intoxicated
விடுதிக்கு மாணவன் ஒருவர் குடிபோதையில் வந்ததாக கூறி வார்டன் வீடியோ எடுத்து மாணவனின் தந்தைக்கு அனுப்பியதால், பிடெக் மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் ஜான்சியைச் சேர்ந்த உதித் சோனி என்ற 20 வயது மாணவன் பிடெக் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். கிரேட்டர் நோய்டாவில் உள்ள நாலேஜ் பார்க்-3 பகுதியில் தனியார் விடுதியில் தங்கி படித்து வந்த மாணவன், .கடந்த 23-ஆம் தேதி வெள்ளிக்கிழமை இரவு இவர் தனது நண்பர்களுடன் மதுபோதையில் விடுதிக்கு வந்ததாக கூறப்படுகிறது.
இதனை கவனித்த விடுதி வார்டன், மாணவரை வீடியோ எடுத்து அவரது தந்தை விஜய் சோனிக்கு அனுப்பியுள்ளார். குறித்த வீடியோவை பார்த்த தந்தை, தொலைபேசியில் மாணவரை கண்டித்ததுடன், படிப்பை நிறுத்திவிட்டு வீட்டிற்கு வருமாறு மிரட்டியுள்ளார். இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான உதித் சோனி, விடுதியின் 04-வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து சக மாணவர்கள் தெரிவிக்கையில்; இரவு 09 மணியளவில் விடுதிக்கு வந்த உதித் சோனியை விதிகளை மீறியதாக கூறி வார்டன் கண்டித்க்கவும், இதற்கிடையே வார்டன் மற்றும் பவுன்சர்கள் பிவிசி பைப்பால் மாணவரை கடுமையாக தாக்கியதாக அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர்.
இந்த அவமானம் தாங்காமலே அவர் உயிரை மாய்த்துக் கொண்டதாக மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். சக மாணவரின் மரணத்தால் ஆத்திரமடைந்த மாணவர்கள், விடுதி ஜன்னல்கள் மற்றும் அங்கிருந்த பஸ்சை அடித்து நொறுக்கி சூறையாடியுள்ளனர். அத்துடன், மாணவரின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், விடுதி உரிமையாளர் மற்றும் வார்டன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
விடுதி வளாகத்தில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வரும் போலீசார், சந்தேகத்தின் பேரில் இருவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவனின் தற்கொலையை தொடர்ந்து, அங்கு பதற்றம் நிலவுவதால் விடுதி முன்பு போலீசார் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
English Summary
A student committed suicide by jumping from the 4th floor after the warden sent a video to his father showing the student arriving at the hostel intoxicated