3வது டி20 போட்டி; நியூசிலாந்துக்கு எதிரான தொடரை கைப்பற்றிய இந்தியா; 14 பந்துகளில் அரைசதம் அடித்து அபிஷேக் சர்மா சாதனை..!
Abhishek Sharma sets a record by scoring a half century in 14 balls
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 03 ஒருநாள் மற்றும் 05 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் நியூசிலாந்து கைப்பற்றியது.
இதையடுத்து இந்தியா-நியூசிலாந்து இடையிலான 05 போட்டிகள் கொண்ட டி20 போட்டிகளில் முதல் போட்டி, கடந்த 21-ஆம் தேதி நடைபெற்றது. அதில், 48 ரன்கள் வித்தியாசத்திலும், 23-ஆம் தேதி நடந்த 02-வது டி20 போட்டியில் 07 விக்கெட் வித்தியாசத்திலும் இந்தியா அபார வெற்றிப் பெற்றது.

இந்நிலையில், இன்று 03-வது டி20 போட்டி இன்று கவுகாத்தியில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 08 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்தது. அணியின் சார்பாக அதிகபட்சமாக பிலிப்ஸ் 48 ரன்கள் அடித்தார். இந்திய அணி தரப்பில் பும்ரா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ரவி பிஷ்னோய், ஹர்திக் பாண்டியா தலா இரண்டு விக்கெட்டுகளையும், ராணா 01 விக்கெட்டினையும், ரன் அவுட் மூலம் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தது. அணியில் முதலாவதாக களமிறங்கிய சஞ்சு சாம்சன் முதல் பந்திலையே டக் அவுட் ஆகி, மீண்டும் அதிர்ச்சி கொடுத்தார். அடுத்ததாக வந்த இஷான் கிஷான் 28 ரன்களில் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து களமிறங்கியா அணியின் கேப்டன் சூரியகுமார் 57 ரன்களும் அபிஷேக் சர்மா 68 ரன்களில் காலத்தில் இருந்து ஆட்டமிழக்காமல் அதிரடி காட்டினார். இதன் மூலம், 10 ஓவர்களில் 02 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் அடித்து இந்தியா எளிதில் வெற்றி பெற்று டி20 தொடரை 3 -0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.
இந்த போட்டியில், அபிஷேக் சர்மா 14 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். யுவராஜ் சிங்கிற்கு அடுத்த படியாக அதிவேகமாக அரைசதம் அடித்த இந்தியர் என்ற சாதனையை படைத்துள்ளார். யுவராஜ் சிங் 12 பந்துகளில் அரைசதம் அடித்ததே தற்போது வரை சாதனையாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
English Summary
Abhishek Sharma sets a record by scoring a half century in 14 balls