கோவை || மது அருந்தும் போது கைகலப்பு - சக நண்பன் கட்டையால் அடித்துக் கொலை.!
police investigation of youth murder case in coimbatore
கோவை || மது அருந்தும் போது கைகலப்பு - சக நண்பன் கட்டையால் அடித்துக் கொலை.!
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள, பொள்ளாச்சி பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ். தினக் கூலி அடிப்படையில் சமையல் வேலை மற்றும் கட்டிட வேலைகளுக்கு சென்று வந்துள்ள இவர் நேற்று மாலை வழக்கம்போல், வேலைக்கு சென்றுவிட்டு வந்தார்.
பிறகு தனது நண்பர்களுடன் ஆடிஸ் வீதிக்கு வந்த ராஜேஷ் மது அருந்தியுள்ளார். அப்போது, திடீரென அவர்களுக்குள் ஏற்பட்ட கைக்கலப்பில் ராஜேஷை அவரது நண்பர்கள் தலையில் கட்டையால் தாக்கியுள்ளனர்.

அதில், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதைபார்த்த அவரது நண்பர்கள் உடனே அங்கிருந்தது தப்பித்துச் சென்றுவிட்டனர். இதையடுத்து இன்று காலை கடை திறப்பதற்காக வந்தவர்கள் ராஜேஷ் உயிரிழந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். அந்தத் தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ராஜேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதைத்தொடர்ந்து போலீசார் இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக முன்பகை காரணமாக நடந்ததா? அல்லது கொலைக்கு வேறு ஏதாவது காரணங்கள் உள்ளதா? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
police investigation of youth murder case in coimbatore