தூத்துக்குடி || பழிக்கு பழி - இளைஞரின் தலையைத் துண்டித்து கொடூரக் கொலை.!
police investigation man murder case in thoothukudi
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அண்ணா நகர் பகுதியில் இளைஞர் ஒருவரின் தலை மட்டும் ரத்த வெள்ளத்தில் தனியாக கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்தத் தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார், அந்த தலையை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் இந்த சம்பவம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் கொலை செய்யப்பட்டது டிஎம்பி காலனி பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் என்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் விசாரணையை விரிவுபடுத்திய போது, அவரது உடல் மையவாடி என்ற இடத்தில் கிடப்பது தெரியவந்தது.

உடனே விரைந்து சென்ற போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே மாரியப்பன் கடந்த ஏப்ரல் மாதம் அவரது உறவினரான சப்பானி முத்து என்பவரை தலையில் கல்லை போட்டு கொலை செய்துள்ளார்.
அதற்கு பழிவாங்கும் வகையில் சப்பானி முத்துவின் உறவினர்கள் மாரியப்பனை கொடூரமான முறையில் தலையை துண்டித்து கொலை செய்திருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து போலீசார் கொலையாளிகளை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
police investigation man murder case in thoothukudi