மதுரையில் கொடூரம்; முட்புதரில் சடலமாக கிடந்த சிறுவன்; காதல் விவகாரத்தில் கொலையா? துப்பு துலங்கியுள்ள போலீசார்..! - Seithipunal
Seithipunal


மதுரை மாநகர் கூடல்நகரில் வசிக்கும் யோகலெட்சுமி - கருப்பசாமி தம்பதியின் மகனாக, தமிழ்செல்வன் மதுரை ஆரப்பாளையம் பகுதியில் உள்ள அரசு உதவிப்பெறும் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வவந்துள்ளார். 

ஞாயிறு விடுமுறையான நேற்று காலையில் கிரிக்கெட் விளையாட செல்வதாக, தனது தாயாரிடம் கூறிவிட்டு தமிழ்செல்வன் வீட்டிலிருந்து சென்றுள்ளார். ஆனால், மாலை வரை ஆவர் வீடு திரும்பவில்லை. இதனால் சிறுவனை அவரது தாயார் மற்றும் உறவினர்கள் ஊர் முழுக்க தேடியுள்ளனர். எங்கு தேடியும் கிடைக்காததால் கூடல்புதூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்த போலீசார் சிறுவனை தேடி ஊருக்குள் சென்றனர். அப்பொழுது மதுரை ஆனையூர் கழிவுநீரேற்று நிலையம் அருகே உள்ள கண்மாய் முட்புதரில் சிறுவன் தமிழ்செல்வன் சடலமாக கிடந்ததை கண்டுள்ளனர். விளையாடச் சென்ற சிறுவன் சடலமாக மீட்கப்பட்டது தெரிந்து அவரது குடும்பத்தினர் பதறிப்போயுள்ளனர்.

இதனையடுத்து உயரதிகாரிகளுக்கு தகவல் அளித்து மாணவனின் சடலத்தை மீட்டு, உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில், உயிரிழந்த மாணவனின் தாயார், தனது மகன் 10-ஆம் வகுப்பு பள்ளி மாணவியிடம் நட்பு ரீதியாகப் பேசி வந்த நிலையில், மாணவியின் தந்தை சில நாட்களுக்கு முன்பு சிறுவனை அழைத்து கண்டித்ததாகவும் எனவே, மாணவியின் தந்தை மீது சந்தேகமாக உள்ளதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.

இருப்பினும் மாணவனின் கொலைக்கான காரணம் என்ன? குறித்து. உண்மையானகொலையாளி யார்? என்பது குறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Police investigating whether the boy found dead in a thorn bush in Madurai was murdered over a love affair


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...




சினிமா

Seithipunal
--> -->