இடைத் தேர்தல் அறிவிப்புக்கு முன்னரே தட்டாஞ்சாவடி தொகுதி வேட்பாளரை அறிவித்த முதலமைச்சர்..! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு உட்பட நான்கு மாநிலங்களில் உள்ள ஐந்து சட்டமன்றத் தொகுதிகளுக்கும், ஒரு மக்களவைத் தொகுதிக்கும் இந்தியத் தேர்தல் ஆணையம் இடைத் தேர்தலை அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் காலியாக உள்ள ஏழு தொகுதிகளில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 06 -ஆம்  இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேப்போன்று, புதுச்சேரியில் காலியாக உள்ள தட்டாஞ்சாவடி தொகுதிக்கும், மேற்குவங்கத்தின் நந்திகிராம் மற்றும் ரெஜினாநகர் ஆகிய ஐந்து சட்டமன்றத் தொகுதிகளுக்கும் அசாமின் நாகான் மக்களவை தொகுதிக்கும் என மொத்தம் ஆறு தொகுதிகளுக்கு இந்தியத் தேர்தல் ஆணையம் இடைத் தேர்தலை அறிவித்துள்ளது.

இந்த ஐந்து சட்டமன்றத் தொகுதிகளுக்கும், ஒரு மக்களவைத் தொகுதிக்கும் வரும் அக்டோபர் 09-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் வரும் செப்டம்பர் 09-ஆம் தேதி தொடங்கி 16-ஆம் தேதி வரை நடைபெறும் எனவும், செப்டம்பர் 19-ஆம் தேதி வேட்புமனு திரும்பப் பெற கடைசி நாள் எனவும், வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 09-ஆம் தேதி எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் புதுச்சேரியின் முதலமைச்சர் ரங்கசாமி, நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தட்டாஞ்சாவடி மற்றும் மங்களம் ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு, இரண்டிலும் வெற்றி பெற்றார். இதனைத் தொடர்ந்து தட்டாஞ்சாவடி எம்.எல்.ஏ. பதவியை அவர் ராஜினாமா செய்தார்.

இந்தியத் தேர்தல் ஆணையம் இன்று இடைத் தேர்தல் அறிவித்துள்ள நிலையில், இரண்டு தினங்களுக்கு முன்பாகவே புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, தட்டாஞ்சாவடி தொகுதி இடைத் தேர்தல் வேட்பாளராக என்.ஆர். காங்கிரஸ் சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. அசோக் ஆனந்த் போட்டியிடுவார் என அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The Chief Minister announced the candidate for Thattanchavadi constituency even before the announcement of the by elections


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...




சினிமா

Seithipunal
--> -->