நடிகர் ராஜ்கிரண் முன்ஜாமீன் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்; பின்னணி என்ன..?
Actor Rajkiran files petition in Madras High Court seeking anticipatory bail
நடிகர் ராஜ்கிரண் முன்ஜாமீன் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். சென்னை மீஞ்சூரில் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் நடத்தி வரும் சரவணன் என்பவர், கடந்த 2022 ஆம் ஆண்டு திரைப்படத்துக்காக நடிகர் ராஜ்கிரணுக்கு 50 லட்சம் ரூபாய் முன்பணம் அளித்துள்ளார். பட தயாரிப்புப் பணிகள் துவங்காததால், பணத்தை திருப்பிக் கொடுக்கும்படி, ராஜ்கிரணிடம், சரவணன் கேட்டுள்ளார்.
தயாரிப்பாளர் சங்கத்தில் நடந்த பேச்சுவார்த்தைகு பின் 10 லட்சம் ரூபாயை 2025 ஆம் ஆண்டு சரவணனுக்கு ராஜ்கிரண் திருப்பிக் கொடுத்துள்ளார். ஆனால், மீதம் 40 லட்சம் ரூபாயை மோசடி செய்துவிட்டதாக, மீஞ்சூர் போலீசில் கடந்த 2025 செப்டம்பரில் சரவணன் புகார் அளித்தார்.
இது குறித்து பொன்னேரி மாஜிஸ்திரேட் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் கடந்த ஆகஸ்ட் 28-ஆம் தேதி நடிகர் ராஜ்கிரண் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இஇந்நிலையில் இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி நடிகர் ராஜ்கிரண் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அவர் அளித்துள்ள மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;
''படம் தயாரிப்பு தொடர்பாக 2022 ஆம் ஆண்டில் ஒப்பந்தம் நடந்த நிலையில், 4 ஆண்டுகளுக்கு பிறகு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. உரிமையியல் வழக்கான இந்த வழக்குக்கு குற்றவியல் சாயம் பூசப்பட்டுள்ளது. தமிழக திரைப்பட ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமான நடிகரான தான், எங்கும் தப்பி விட மாட்டேன்.'' எனக் கூறியுள்ளார். குறித்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Actor Rajkiran files petition in Madras High Court seeking anticipatory bail