அக்டோபர் 06-ஆம் தேதி மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத் தேர்தல்; தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!
By elections for Madhurantakam and Tarapuram constituencies on October 6th
தமிழ்நாட்டில் மொத்தம் 07 தொகுதிகள் காலியாக உள்ள நிலையில், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு மட்டும் வரும் அக்டோபர் 06-ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழக முதலமைச்சர் விஜய், திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றி பெற்றார். இதனைத் தொடர்ந்து, திருச்சி கிழக்கை ராஜினாமா செய்தார்.
அதுபோன்று, அதிமுகவில் இருந்து மதுராந்தகம் (தனி) எம்.எல்.ஏ. மரகதம் குமாரவேல், தாராபுரம் (தனி) எம்.எல்.ஏ. சத்யபாமா, பெருந்துறை எம்.எல்.ஏ. ஜெயக்குமார், அம்பாசமுத்திரம் எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா, விராலிமலை எம்.எல்.ஏ. விஜயபாஸ்கர் மற்றும் கரூர் எம்.எல்.ஏ. எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோர் வெவ்வேறு காலகட்டங்களில் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, தவெகவில் இணைந்தனர்.
இதனைத் தொடர்ந்து திருச்சி கிழக்கு, மதுராந்தகம், தாராபுரம், பெருந்துறை, அம்பாசமுத்திரம், விராலிமலை மற்றும் கரூர் ஆகிய ஏழு தொகுதிகளும் காலியானதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இந்த ஏழு தொகுதிகளுக்கும் எப்போது இடைத் தேர்தல் நடத்தப்படும் எனும் எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், தற்போது தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு மட்டும் இந்தியத் தேர்தல் ஆணையம் இடைத் தேர்தல் நடத்த அறிவித்துள்ளது.
இந்த இரண்டு தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் வரும் 09-ஆம் தேதி தொடங்கி 16-ஆம் தேதி நிறைவடையும் எனவும், வேட்புமனு திரும்ப பெற கடைசி நாள் செப்டம்பர் 16-ஆம் தேதியும் எனவும், வாக்குப் பதிவு அக்டோபர் 06-ஆம் தேதியும், வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 09-ஆம் தேதி நடைபெறும் எனவும் இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
காலியாவுள்ள ஏழு தொகுதிகளில் தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய இரண்டு தொகுதிகளைத் தவிர்த்து மற்ற ஐந்து தொகுதிகள் தொடர்பாக வழக்கு நிலுவையில் உள்ளது. இதனால், இந்த இரண்டு தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் ஆணையம் இடைத் தேர்தலை அறிவித்துள்ளது. இதனால் தமிழாகி இடைத்தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
English Summary
By elections for Madhurantakam and Tarapuram constituencies on October 6th