சமையல் எரிவாயு மீதான கட்டுப்பாடுகளை மத்திய அரசு தளர்த்தியது..! - Seithipunal
Seithipunal


ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா கூட்டு வான்வெளி தாக்குதல் நடத்தியால் ஈரானும் பதில் தள்ளுதல் நடத்தியது. இதன் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளில் பெரும் போர் பதற்றம் நிலவியது.  

இதனால் ஈரான் கச்சா எண்ணெய் போக்குவரத்தின் முக்கிய வழித்தடமான ஹர்மூஸ் நீரிணை மூடியதால், கச்சா எண்ணெய் விலை ஏற்றமும், தட்டுப்பாடும் ஏற்பட்டது. இதனால் உலக சந்தையில் எரிபொருள் விலை ஏற்றம் அதிகரித்தது.

இதன் காரணமாக இந்தியாவில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.  பல இடங்களிலும் மக்கள் அச்சம் காரணமாக பெட்ரோல், டீசல் நிரப்புவது, சிலிண்டர்களை தேவைக்கு அதிகமாக வாங்கி குவிப்பது உள்ளிட்ட காரணங்களுக்காக தட்டுப்பாடு ஏற்படும் மேலும் அதிகரித்தது.

ஆனால், மத்திய அரசு தொடர்ந்து பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு இல்லை என தெரிவித்து வந்தது. இருந்தபோதிலும் மக்கள் தேவைக்கு அதிகமாக அச்சத்தின் காரணமாக வாங்கத் தொடங்கினர்.

இதனால், தேவையான வாடிக்கையாளர்களுக்கே சமையல் எரிவாயு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதன் காரணமாக சமையல் எரிவாயுவை முன்பதிவு செய்வதில் மத்திய அரசு பல்வேறு கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்தது.

பின்னர் சமையல் எரிவாயு முன்பதிவு செய்வதும், விநியோகமும் படிப்படியாக சமநிலைக்கு திரும்பியது. இதனைத் தொடர்ந்து முதலில் வணிகப் பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு கட்டுப்பாடுகளை மத்திய அரசு தளர்த்தியது.

நகர்ப்புற சமையல் எரிவாயு மீதான கட்டுப்பாடுகளை மத்திய அரசு தளர்த்தியது. இந்நிலையில் தற்போது, கிராமப்புற சமையல் எரிவாயு மீதான கட்டுப்பாடுகளையும் தளர்வு செய்துள்ளது.

இது குறித்து மத்திய பெட்ரோலியத் துறை இணை அமைச்சர் சுரேஷ் கோபி தெரிவித்துள்ளாதவது; ''கிராமப்புறங்களில் கேஸ் சிலிண்டர் கட்டுப்பாடுகளை தளர்த்தி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கேஸ் சிலிண்டர் பதிவு செய்வதற்கான இடைவெளி 45 நாட்களில் இருந்து 25 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது,'' என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The central government has relaxed restrictions on cooking gas


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...




சினிமா

Seithipunal
--> -->