ஜனநாயகன் பட லீக் விவகாரம்: ஃப்ரீலான்சிங் எடிட்டர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த வழக்கு; சென்னை காவல் ஆணையருக்கு உயர்நீதிமன்றம் பதிலளிக்க உத்தரவு..!
High Court orders Chennai Police Commissioner to respond in Janyayan Film League case
டைலாக் முதல்வர் விஜய் நடித்த 'ஜனநாயகன்' படத்தை இணையதளத்தில் வெளியிட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்ட உமாசங்கரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்ததை எதிர்த்த வழக்கில், சென்னை காவல் ஆணையர் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
'ஜனநாயகன்' படம் தணிக்கைக் குழுவின் மறு ஆய்வு குழு முன் ஆய்வில் இருந்த போது, கடந்த ஏப்ரல் 03 ஆம் தேதி இணையதளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது குறித்து பட தயாரிப்பு நிறுவனமான கே.வி.என். புரொடக்ஷன்ஸ் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் ஃப்ரீலான்சிங் எடிட்டரான திருவேற்காட்டைச் சேர்ந்த உமா சங்கர் என்பவர் கைது செய்யபட்டார். அவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து மாநகர காவல் ஆணையர், ஜூலை 30-ஆம் தேதி உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து உமா சங்கரின் சகோதரி ரேணுகா தேவி உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். தனது சகோதரர் துணிக்கடையில் மேலாளராக பணியாற்றுகிறாரே தவிர, சினிமா எடிட்டர் இல்லை எனவும், காவல் ஆணையர் தடுப்பு காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டதால் உமா சங்கர் மீதான குண்டர் தடுப்பு காவல் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என கோரியிருந்தார்.
குறித்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் என்.சதீஷ்குமார் மற்றும் கே.ராஜசேகர் அமர்வும், நான்கு வாரங்களில் பதிலளிக்கும்படி, சென்னை காவல் ஆணையருக்கு உத்தரவிட்டு, விசாரணை தள்ளி வைத்துள்ளனர்.
English Summary
High Court orders Chennai Police Commissioner to respond in Janyayan Film League case