"அழுத்தங்களை எளிதாகக் கையாளுகிறார் முதலமைச்சர்": மகனை நேரில் சந்தித்து பாராட்டிய இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் பெருமிதம்!
Director SA Chandrasekhar Praises CM Vijay Composure Amid Assembly Tensions Shares Emotional Post as a Proud Father
தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிலவும் கடுமையான அரசியல் பரபரப்புகள் மற்றும் பதவிகள் சார்ந்த அழுத்தங்களுக்கு மத்தியிலும், முதலமைச்சர் ஜோசப் விஜய் மிகவும் நிதானத்துடனும் எளிதாகவும் சூழல்களைக் கையாளுவது ஒரு தந்தையாகத் தனக்குப் பெருமையளிப்பதாகப் பிரபல திரைப்பட இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
இன்று சட்டமன்றத்தில் நடைபெற்ற காவலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு முதலமைச்சர் விஜய் அளித்த பதிலுரையின் போது, எதிர்க்கட்சியான திமுக கடுமையான எதிர்ப்புகளைப் பதிவு செய்தது. முதலமைச்சரின் உரையை எதிர்த்து திமுக உறுப்பினர்கள் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரின் இருக்கையை முற்றுகையிட்டதுடன், அவையின் மையப்பகுதியில் தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர். இத்தகைய காரசாரமான விவாதங்கள் நிறைவடைந்த நிலையில், இன்றைய அவை நடவடிக்கைகளுக்குப் பிறகு முதலமைச்சர் விஜய்யை அவரது பெற்றோர் எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் ஷோபா சந்திரசேகர் ஆகியோர் நேரில் சென்று சந்தித்தனர்.
இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள எஸ்.ஏ.சந்திரசேகர், “எத்தனை அழுத்தங்கள் இருந்தாலும், அதை எளிதாகக் கையாளும் முதல்வரை சந்தித்தது, ஒரு தந்தையாகப் பெருமை பெற்ற நேரம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் களம், அரசுப் பொறுப்புகள் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை எனப் பல தரப்பிலிருந்தும் அடுத்தடுத்து வரும் இக்கட்டான சூழல்களை முதலமைச்சர் விஜய் நிதானத்துடன் எதிர்கொள்ளும் விதம் குறித்து அவரது தந்தை பகிர்ந்துள்ள இந்தப் பதிவு, தற்போது சமூக வலைதளங்களில் இணையவாசிகளாலும் அரசியல் வட்டாரத்திலும் பரவலாகக் கவனத்தைப் பெற்று வருகிறது.
English Summary
Director SA Chandrasekhar Praises CM Vijay Composure Amid Assembly Tensions Shares Emotional Post as a Proud Father