ரூ.2 கோடி பட்ஜெட்டில் ₹122 கோடி வசூல்! 60 மடங்கு லாபம் ஈட்டி பாக்ஸ் ஆபீஸில் சாதனை படைத்த 'ஹனுமான் அன்ஷ்' ஹிந்தி திரைப்படம்! - Seithipunal
Seithipunal



குறைந்த செலவில் எடுக்கப்பட்டு மிகப்பெரிய திரையரங்க வரவேற்பைப் பெறும் திரைப்படங்களின் வரிசையில் 'ஹனுமான் அன்ஷ்' என்ற ஹிந்தி திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் புதிய சாதனை படைத்துள்ளது. வெறும் ரூ. 2 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இத்திரைப்படம், இதுவரை ரூ. 122.13 கோடி வசூலித்து 60 மடங்குக்கும் மேலாக, அதாவது 6,006 சதவீதம் பிரம்மாண்ட லாபத்தைக் கொடுத்துள்ளது.

படம் திரையரங்குகளில் வெளியான தொடக்கக் காலத்தில் பெரிய அளவிலான வரவேற்பைப் பெறவில்லை. வெளியான முதல் 2 வாரங்களில் வெறும் ரூ. 1.5 கோடி மட்டுமே வசூலித்திருந்த நிலையில், பார்வையாளர்களின் நேர்மறையான விமர்சனங்கள் மற்றும் வாய்மொழி நற்சான்று (Word of Mouth) காரணமாக அடுத்தடுத்த வாரங்களில் இதன் வசூல் பலமடங்கு எகிறியது.

அதன்படி, வெளியான அடுத்த 3 வாரங்களிலேயே இத்திரைப்படம் ரூ. 120 கோடிக்கும் மேல் வசூலித்து அசத்தியுள்ளது. மிகக் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட ஒரு திரைப்படம் திரையரங்குகளில் இத்தகைய பிரம்மாண்ட வசூல் சாதனையை நிகழ்த்தியிருப்பது இந்தியத் திரையுலகினர் மற்றும் திரை விமர்சகர்களிடையே பெரும் வியப்பையும் பாராட்டையும் ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Low-Budget Hindi Film Hanu-Man Ansh Collects Over 122 Crore Yields 6006 Profit at Box Office


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...


செய்திகள்



சினிமா

Seithipunal
--> -->