கிருஷ்ணகிரி : கள்ளக் காதலனுடன் சேர்ந்து கணவரை கொன்று எரித்த மனைவி.!!  - Seithipunal
Seithipunal


கிருஷ்ணகிரி : கள்ளக் காதலனுடன் சேர்ந்து கணவரை கொன்று எரித்த மனைவி.!! 

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சானமாவு வனப்பகுதியில் கடந்த மார்ச் மாதம் 19 ஆம் தேதி எரிந்த நிலையில் ஆண் சடலம் ஒன்று கிடந்துள்ளது. இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். 

அந்த தகவலின் படி போலீசார் விரைந்துச் சென்று அந்த உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அதில், உயிரிழந்த நபர் தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் என்பது தெரியவந்தது.

மேலும், இவருக்கு லட்சுமி என்ற மனைவி உள்ளார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது, பல அதிர்ச்சித் தகவல் வெளியானது. அதன் விவரம் பின்வருமாறு:-  "எனது கணவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. அதனால், போதையில் வந்து அடிக்கடி எனக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்தார். 

அதன் படி, அவர் கடந்த மார்ச் மாதம் 18 ஆம் தேதியும் குடித்து விட்டு என்னிடம் வந்து பாலியல் தொல்லை கொடுக்க முயன்றுள்ளார். அப்போது, நான் வீட்டில் இருந்த கட்டையால் அவரது தலையில் ஓங்கி அடித்தேன். அதில் அவர் உயிரிழந்து விட்டார்.

கணவரின் உடலை அங்கிருந்து மறைக்க முடிவு செய்து, எனது கள்ளக்காதலன் சின்ன ராஜுக்கு போன் செய்தேன். எனக்கும், அவருக்கும் பள்ளி பருவம் முதலே காதல் இருந்தது. அந்தக் காதல் திருமணத்திற்கு பிறகும், நீடித்து வந்தது.

நான் போன் செய்ததும் சின்னராஜ் உடனே எங்கள் வீட்டிற்கு வந்தார். அதன் பின்னர் நாங்கள் இருவரும் எனது கணவரின் உடலை அங்கிருந்து எடுத்து சரக்கு வாகனத்தில் போட்டு சானமாவு வனப்பகுதிக்கு கொண்டு சென்று அவரது உடலுக்கு தீ வைத்து எரித்து விட்டோம்.

கணவரின் உடலை எரித்ததால் எங்களை கண்டுபிடிக்க மாட்டார்கள் என்று நினைத்தோம். இருப்பினும் போலீசார் விசாரணை நடத்தி எங்களை கைது செய்தார்கள்” என்று வாக்கு மூலத்தில் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

police enquiry to wife kill husband case in krishnagiri


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->