சிக்கன் கிரேவி சாப்பிட்டு விட்டு குளிர்பானம் அருந்தியதால் தாய்-மகள் உயிரிழப்பா?.! காவல்துறை விசாரணை..!! - Seithipunal
Seithipunal


சிக்கன் கிரேவி சாப்பிட்டு விட்டு குளிர்பானம் சாப்பிட்ட தாய் மகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துகுடி மாவட்டம், கோவில்பட்டி பகுதியில் வசித்து வருபவர் இளங்கோ. இவருக்கு  கற்பகவள்ளி என்ற மனைவியும் சண்முகபாண்டி, தர்ஷ்னி என்ற  இரு குழந்தைகளும் உள்ளனர்.

கடந்த செவ்வாய் கிழமை இரவு கற்பகவள்ளி மற்றும் அவரது மகள் அங்குள்ள தனியார் ஹோட்டலுக்கு சென்று சிக்கன் கிரேவி வாங்கி வந்து சாப்பிட்டுள்ளார். இதனை அடுத்து அவர்களுக்கு லேசான நெஞ்செரிச்சல் ஏற்படவே பக்கத்தில் உள்ள பெட்டி கடையில் 10 ரூபாய் குளிர்பானம் வாங்கி குடித்துள்ளனர்.

சிறிது நேரத்திலேயே அவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்படவே  அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  மேல் சிகிச்சைக்காக நெல்லை மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி அவர்கள் உயிரிழந்தனர். இதனை அடுத்து, இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் அவர்களின் உடலை பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்துகள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து ஹோட்டல் மற்றும் பெட்டிகடையில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அவர்களின் பிரேதபரிசோதனை அறிக்கை வந்தால் தான் அவர்களின் இறப்புக்கான முழு காரணம் தெரியவரும் எனவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Police are investigating whether the mother-daughter died after eating chicken gravy and drinking soft drinks


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->