அடக்கொடுமையே...! படமாத்தூரில் சர்க்கரை ஆலையில் விஷவாயு தாக்கம்...! - 2 தொழிலாளர்கள் பலி - Seithipunal
Seithipunal


சிவகங்கை மாவட்டம் படமாத்தூரில் உள்ள சர்க்கரை ஆலையில் ஏற்பட்ட திடீர் விபத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆலையில் உள்ள மொலாசஸ் (சர்க்கரை தயாரிப்பில் கிடைக்கும் பாகு) சேமிப்பு தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த போது, அங்கிருந்த விஷவாயு தாக்கியதில் இரண்டு தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் சிவகங்கை பகுதியைச் சேர்ந்த பொன்னழகு மற்றும் கரும்பாவூர் கிராமத்தைச் சேர்ந்த மோகனசுந்தரம் ஆகியோர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து, வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Poisonous gas leak sugar factory Padamathur 2 workers dead


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->