உங்கள் வருகைக்காக காத்துக் கொண்டிருக்கிறேன் - தொண்டர்களுக்கு அன்புமணி இராமதாஸ் வெளியிட்ட வீடியோ!
PMK Vanniyar Chithirai Maanadu Anbumani Ramadoss
வரும் மே 11ம் தேதி திருவிடந்தையில் வன்னியர் சங்க சித்திரை முழுநிலவு மாநாடு நடைபெற உள்ளது. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தும் நோக்குடன் நடைபெறும் இந்த மாநாட்டிற்கான ஏற்பாடுகள் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளன.
கடந்த வாரம் மாநாட்டிற்காக தயாரிக்கப்பட்ட இரண்டு பாடல்கள் வெளியிடப்பட்ட நிலையில், இரு திணைகளுக்கு முன் மாநாட்டிற்கான லோகோவும் வெளியிடப்பட்டது. சித்திரை முழுநிலவு மாநாட்டை சிறப்பிக்க நம் குலம் காக்கும் ‘திரௌபதி அம்மன்‘ பாடலை அன்புமணி இராமதாஸ் இன்று வெளியிட்டுள்ளார்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், மாநாட்டு ஏற்பாட்டுக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டு பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், "உங்கள் வருகைக்காக காத்துக் கொண்டிருக்கிறேன். அமைதியான முறையில், நீங்கள் வரவேண்டும்." என பாமக தொண்டர்களுக்கு அக்கட்சியின் தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
English Summary
PMK Vanniyar Chithirai Maanadu Anbumani Ramadoss