திமுக ஆட்சியில் பெண்கள் வெளியில் நடமாட முடியாத சூழல் நிலவுகிறது - கொந்தளிக்கும் எஸ்பி வேலுமணி!
ADMK sp velumani condemn coimbatore college girl harrasment
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி எடுத்துள்ள கண்டன அறிக்கையில், "கோவையில் விமான நிலையம் பின்புறம் கல்லூரி மாணவி, மூன்று பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக வந்த செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும் மன வேதனையும் அடைந்தேன்.
மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆட்சியிலும், மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர், கழகப் பொதுச்செயலாளர், புரட்சித்தமிழர் அண்ணன் எடப்பாடியார் அவர்கள் தலைமையிலான கழக ஆட்சியிலும் பெண்களுக்கு முழுமையான பாதுகாப்பு வழங்கப்பட்டது. ஆனால் தற்போதைய திமுக ஆட்சியில் பெண்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லாததால் அவர்கள் வெளியில் நடமாட முடியாத சூழலே நிலவுகிறது.
பெண்கள் பாதுகாப்பில் தோல்வியடைந்த இந்த மக்கள் விரோத திமுக அரசை 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டு வீட்டுக்கு அனுப்பப் போவது உறுதி! தமிழ்நாட்டு மக்களின் ஆதரவோடு மாண்புமிகு அண்ணன் எடப்பாடியார் அவர்கள் தலைமையில் பெண்களுக்கு முழுமையான பாதுகாப்பு அளிக்கக்கூடிய அரசு அமையும்" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
ADMK sp velumani condemn coimbatore college girl harrasment