பெரியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா.. பாமக எம்எல்ஏக்கள் வெளியேறியதால் பரபரப்பு.!! - Seithipunal
Seithipunal


சேலம் மாவட்டம் பெரியார் பல்கலைக்கழகத்தின் 21வது ஆண்டு பட்டமளிப்பு விழா இன்று தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி தலைமையில் நடைபெற்று வருகிறது. இந்த விழா அறிவித்ததில் இருந்து பல்வேறு சர்ச்சைகள் கிளம்பிய நிலையில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தந்தை பெரியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை புறக்கணித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்வதால் அமைச்சர் பொன்முடி பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ளவில்லை என்ற தகவல் வெளியானது.

இந்த நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த சேலம் மாவட்டம் மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அருள் மற்றும் மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் ஆகியோர் சேலம் தந்தை பெரியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் இருந்து திடீரென பாதியில் வெளியேறி சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  பட்டமளிப்பு விழாவில் மக்கள் பிரதிநிதிகளுக்கு பெரியார் பல்கலைக்கழக நிர்வாகம் உரிய மரியாதை கொடுக்கவில்லை என இருவரும் வெளியேறியதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் சேலம் மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அருள் இந்த சம்பவம் குறித்து கூறுகையில் "தந்தை பெரியார் பல்கலைக்கழகத்தில் சமூக அநீதி நடைபெற்று வருவதால் விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என பாமக சார்பில் நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். பெரியார் பல்கலைக்கழகம் எனது தொகுதியில் அமைந்துள்ளது. ஆனால் பல்கலைக்கழகம் சார்பில் முறையான அழைப்பு விடுக்க வில்லை. 

இருப்பினும் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு கட்டாயம் பங்கேற்க வேண்டும் என கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் நானும், மேட்டூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சதாசிவமும் கலந்து கொண்டோம். 

அப்போது தமிழக ஆளுநருக்கு சால்வை அணிவித்து மனு அளிக்க அனுமதி கேட்டோம். அரசு அதிகாரிகளும், விழா ஏற்பாட்டாளர்களும் நாங்கள் தெரிவித்த செய்தியை முறையாக ஆளுநருக்கு தெரிவிக்கவில்லை. அதனால் நாங்கள் எதிர்ப்பு ஏதும் தெரிவிக்காமல் அமைதியாக வெளியே வந்து விட்டோம்.

மற்றபடி வெளிநடப்பு ஏதும் செய்யவில்லை. தந்தை பெரியார் பல்கலைக்கழகத்தில் தற்பொழுது வரை நடைபெற்ற எந்த கூட்டத்திற்கு முறையாக என்னை அழைப்பதில்லை. தந்தை பெரியார் பல்கலைக்கழக நிர்வாகம் மக்கள் பிரதிநிதிகளுக்கு உரிய மரியாதையை வழங்குவதில்லை" என சேலம் மேற்கு தொகுதி பாமக எம்எல்ஏ அருள் குற்றம் சாட்டியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PMK MLAs walked out from Periyar University graduation ceremony


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->