மதுவின் கொடுமையை உணர்த்தும் வாசகத்தை மாற்றாதீர் - மருத்துவர் அன்புமணி இராமதாஸ்.!! - Seithipunal
Seithipunal


"குடி குடியை கெடுக்கும்" என்பதில் சந்தேகமில்லை. ஆகையால், மது விழிப்புணர்வு வாசகங்களை மாற்றக்கூடாது என மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார். 

பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் பதிவு செய்துள்ள ட்விட்டர் பதிவில், " தமிழ்நாட்டில் மதுவின் தீமைகளை குறிக்கும் வகையிலான,”குடி குடியைக் கெடுக்கும் - குடிப்பழக்கம் உடல் நலத்தைக் கெடுக்கும்”, ” மது நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்குக் கேடு” என்ற விழிப்புணர்வு வாசகங்கள் நீக்கப்பட்டு, புதிய வாசகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இது பெரும் தவறு!

”மது அருந்துதல் உடல்நலத்திற்கு கேடு”, ”பாதுகாப்பாக இருப்பீர், மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டாதீர்” என்ற புதிய வாசகங்கள் மதுவின் கொடுந்தீமைகளை  மக்களுக்கு உரைக்கச் செய்வதாக இல்லை.  மதுவின் தீமைகளை குறைத்துக் கூறுவதாக உள்ளது!

மதுவால் குடும்பங்கள் சீரழிவது உண்மை; பல்லாயிரக்கணக்கான குழந்தைகள் ஆதரவற்றவர்களாகியுள்ளனர்; ஆயிரக்கணக்கான இளம்பெண்கள் கைம்பெண்களாகியுள்ளனர்.  இந்த உண்மையை மறைக்கும் வகையில் வாசகங்கள் இருக்கக்கூடாது!

ஏற்கனவே இருந்த விழிப்புணர்வு வாசகங்கள் நீடிக்க வேண்டும். அவற்றுடன் மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டாதீர் என்பதை கூடுதலாக சேர்த்துக் கொள்ளலாம். லேபிள்களில் எச்சரிக்கைப் படங்களையும் சேர்க்கலாம். இவற்றை விட மதுக்கடைகளை மூடினால் அது இன்னும் சிறப்பு " என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

PMK Dr Anbumani Ramadoss Request to Wont Change Drinking Habit Warning Contents Old to New


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->