கலைஞர் மகளிர் உதவித்தொகை பெற 29-ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம்! - Seithipunal
Seithipunal


கலைஞர் மகளிர் உதவித்தொகை பெறாமல் இருக்கும் விடுபட்ட பெண்கள் வரும் 29-ந்தேதி முதல் விண்ணப்பம் செய்யலாம் என  தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில்,  கடந்த 2023-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15-ந்தேதி அண்ணா பிறந்தநாளில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தை  முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் கீழ்  மாதந்தோறும் பெண்களுக்கு ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது.  தமிழகத்தில் தற்போது 2 கோடியே 26 லட்சத்து 14 ஆயிரத்து 128 குடும்ப அட்டைகள் உள்ளநிலையில்1 கோடியே 12 லட்சம் பெண்கள் உரிமைத்தொகை பெற முடியவில்லை.  .

இந்தநிலையில் தகுதியான விடுபட்ட பெண்களுக்கு உரிமைத்தொகை வழங்கப்படும் என்று  முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அந்தவகையில் இந்த அறிவிப்பை நடைமுறைப்படுத்தும் வகையில் கலைஞர் மகளிர் உதவித்தொகை பெறாமல் இருக்கும் விடுபட்ட பெண்கள் வரும் 29-ந்தேதி முதல் விண்ணப்பம் செய்யலாம் என  தமிழக அரசு தெரிவித்துள்ளது.அதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Women can apply for the Kalaignar assistance scheme from the 29th


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->