திமுக கூட்டணியில் அதிருப்தி இருப்பதாக எழுந்த செய்திகள் அனைத்தும் பொய்! - வைகோ
All news about dissatisfaction with DMK alliance is false Vaiko
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் 'வைகோ' திருச்சியில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது," தமிழகத்தில் கூட்டணி ஆட்சி சாத்தியமில்லை.

கூட்டணி ஆட்சியை நான் விரும்பவில்லை, அதனை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தி.மு.க. தலைவர் ஸ்டாலின் 2026-ம் ஆண்டிலும் ஆட்சியை தொடர்ந்து நடத்துவார்.
தி.மு.க. அறுதி பெரும்பான்மை பெறும் என்பதால் கூட்டணி ஆட்சி பற்றிய பேச்சு எழாது. தி.மு.க. கூட்டணியில் அதிருப்தி இருப்பதாக எழுந்த செய்திகள் அனைத்தும் பொய்" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
All news about dissatisfaction with DMK alliance is false Vaiko