சிகிச்சை, பராமரிப்பு வசதிகளுடன் கூடிய மன நல காப்பகம்: கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரியில் விரைவில் செயல்பாட்டுக்கு வருகிறது..!
A mental health center with treatment and care facilities will soon be operational at the Kanyakumari Government Medical College
தமிழகம், கன்னியாகுமரிக்கு வட மாநிலங்களில் இருந்து தினசரி மற்றும் வாராந்திர ரயில்கள் உள்ளன. இந்த ரயில்களில் அதிக சுற்றுலா பயணிகள் வந்து இறங்குகின்றனர். இதனால் போது அங்கு வருபவர்களில் ஆதரவற்ற, கைவிடப்பட்ட மற்றும் மனநிலை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது.
இவர்கள் மொழி தெரியாமல் ரயில் நிலையங்களில் அலைந்து திரிவது மற்றும் கடை வீதிகளில் வலம் வரும் மன நல நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. இப்படி அனாதையாக, பாதுகாப்பற்ற நிலையில் சுற்றி திரிபவர்களை மீட்டு, அவர்களை அரவணைக்கும் வகையில் அரசு சார்பில் காப்பகம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை முன் வைக்கப்பட்டு வருகிறது.
கன்னியாகுமாரி மாவட்டத்தில் தற்போது அரசு அனுமதி பெற்ற காப்பகங்கள் பாதுகாப்பு களமாக இருந்தாலும், சிகிச்சை முறைகள் இங்கு போதுமானதாக இல்லை என்று சொல்லலாம். இந்நிலையில், இது போன்ற நிலைகளை நிவர்த்தி செய்ய மாவட்ட ஆட்சியர் அழகுமீனா நடவடிக்கை எடுத்துள்ளார். இதன் காரணமாக தேசிய நல ஆணையத்தின் சார்பில் அரசு சார்ந்த மன நல காப்பகம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி மாநில சுகாதார இயக்குனரகத்தின் மேற்பார்வையில் மாவட்ட சுகாதார இணை இயக்குனரக அலுவலகம் இதற்கான இடத்தை தேடி வந்த நிலையில், ஆட்சியர் அழகுமீனா உத்தரவின் படி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் பயன்பாடு இல்லாத நிலையில் உள்ள பழைய கட்டிடத்தை புதுப்பித்து அரசு சார்ந்த மன நல காப்பகமாக அமைக்க முடிவெடுக்கப்பட்டு பணிகள் தொடங்கிய நிலையில், தற்போது பணிகள் நிறைவடைந்துள்ளன.
இதனால், விரைவில் அங்கு மன நல காப்பகம் திறக்கப்படவுள்ளது. இது குறித்து சுகாதார இணை இயக்குனரக அலுவலக அதிகாரிகளிடம் கேட்ட போது, கமாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில், இணை இயக்குனர் டாக்டர் ரவிக்குமார் மேற்பார்வையில் தற்போது மன நல காப்பக பணிகள் நடந்து வருகின்றன. பணிகள் கிட்டத்தட்ட முடிவடைந்துள்ளன என்று குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த மன நல காப்பகம், என்.ஜி.ஓ. சார்பில் பராமரிக்கப்படும் காப்பகமாக இருந்தாலும், அரசு சார்ந்த காப்பகமாகவே இருக்கும் என்றும், இங்கு மனநலம் பாதிக்கப்பட்ட நபரை அதிக பட்சம் 30 நாட்கள் வரை அனுமதித்து பராமரிப்பு மற்றும் சிகிச்சை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிகிச்சைக்கு பின்னரும் அவர்கள் குணமாகவில்லை என்றாலும், அவர்களை பார்க்க உறவினர்கள் யாரும் வர வில்லை என்றால் மாவட்டத்தில் அரசு அங்கீகாரத்துடன் இயக்கும் 18 மன நல காப்பகங்களில் ஏதாவது ஒரு காப்பகத்துக்கு அவர்கள் அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், அவர்கள் தொடர்ந்து அரசின் கண்காணிப்பில் இருப்பார்கள் என்றும் தெரிவித்துள்ளனர். இந்த மருத்துவக்கல்லூரியில் உள்ள மன நல காப்பகத்தின் சுவர்களில் இயற்கை தன்மையுடன் வரையப்பட்டுள்ள ஓவியங்களும் வெகுவாக கவர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
A mental health center with treatment and care facilities will soon be operational at the Kanyakumari Government Medical College