உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை: கேரள உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ள சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி நிஷா பானு..!
Madras High Court Judge Nisha Banu transferred to Kerala High Court
உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரையின் படி, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி நிஷா பானுவை கேரளா உயர் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதிகளில் ஒருவர் நீதிபதி நிஷா பானு. சீனியாரிட்டியில் 04-வது இடத்தில் உள்ளார். இவர், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் தொடர்பான வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளை விசாரணை நடத்தியவர்.
தற்போது, இவரை கேரளா உயர் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்து உச்ச நீதிமன்ற கொலிஜியம் ஒன்றிய சட்ட அமைச்சகத்திற்கு பரிந்துரை செய்துள்ளது. அத்துடன், அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி சஞ்சய் குமார் சிங் சென்னை உயர் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்ய பரிந்துரையையும் உச்ச நீதிமன்ற கொலிஜியம் ஒன்றிய சட்ட அமைச்சகத்திற்கு அனுப்பியுள்ளது.

நேற்று நடந்த உச்ச நீதிமன்ற கொலிஜியம் கூட்டத்தில் மொத்தம் 14 உயர் நீதிமன்ற நீதிபதிகள் இடமாற்ற செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதன்படி, கொலிஜிய கூட்டத்தில் குஜராத் மாநிலத்தை சேர்ந்த நீதிபதி விபுல் மனுபாய் பஞ்சோலியை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை செய்தது. ஆனால், இதற்கு ஜெலிஜியத்தில் உறுப்பினராக இருந்த மூத்த நீதிபதி நாகரத்னா கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
இதனையடுத்து, நீதிபதி விபுல் பஞ்சோலி சீனியாரிட்டி பட்டியலில் 57-வது இடத்தில் இருக்கும் நிலையில், அவரை விட தகுதி வாய்ந்த சீனியர் நீதிபதிகளில் ஒருவரை பரிந்துரைக்கலாம் என்று அவர் கருத்து தெரிவித்தார். இவ்வாறு உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதி எதிர்ப்பு தெரிவித்துள்ளமை நீதிபதிகள் மத்தியில் பரபரப்பாக பேசும் பொருளாக மாறியுள்ளது.
English Summary
Madras High Court Judge Nisha Banu transferred to Kerala High Court