ஐ .டி. ஊழியரை கடத்தி, தாக்கிய வழக்கு: நடிகை லட்சுமி மேனனை கைது செய்ய இடைக்கால தடை விதித்துள்ள நீதிமன்றம்..! - Seithipunal
Seithipunal


ஐ .டி. ஊழியர் ஒருவர் கடத்தப்பட்டு தாக்கிய சம்பவத்தில், நடிகை லட்சுமி மேனனை கைது செய்ய கேரள உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. 

கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே ஆலுவாவை சேர்ந்தவர் அலியார் ஷா சலீம் (28). கொச்சியில் உள்ள ஒரு ஐடி பார்க்கில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 02 தினங்களுக்கு முன்பு பானர்ஜி ரோட்டில் உள்ள ஒரு மது பாருக்கு தனது நண்பர்களுடன் சென்றிருந்த போது அதே பாரில் இருந்த ஒரு கும்பலுடன் அவருக்கு தகராறு ஏற்பட்ட்டுள்ளது.

பின்னர், அலியார் ஷா சலீம், தனது காரில் வீட்டிற்கு புறப்பட்டு சென்ற போது, அவரை பின்தொடர்ந்து வந்த அந்த கும்பல், அலியார் ஷாவின் காரை வழிமறித்து, அவரை காரில் இருந்து இறக்கி, தங்களுடைய காரில் கடத்தி சென்று சரமாரியாக தாக்கி விட்டு தப்பித்து சென்றுள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவம் குறித்து, அலியார் ஷா சலீம் கொச்சி வடக்கு போலீசில் புகார் செய்த நிலையில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த சம்பவ இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் பரிசோதித்தனை செய்ததில், அலியார் ஷாவை தாக்கியது எர்ணாகுளத்தை சேர்ந்த ரஞ்சித், அனீஷ், சோனா என்ற இளம்பெண் என தெரிய வந்துள்ளது.

குறித்த ஆதாரங்களை வைத்து, 03 பேரையும் போலீசார் கைது செய்துள்ள நிலையில், இதற்கிடையே தன்னை தாக்கிய கும்பலில் நடிகை லட்சுமி மேனனும் இருந்ததாக அலியார் ஷா தனது புகாரில் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து அவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

இந்நிலையில், நடிகை லட்சுமி மேனன் தலைமறைவாக இருப்பதாக கூறப்பட்ட நிலையில், குறித்த தாக்குதல் வழக்கில் தனக்கு தொடர்பு இல்லை என கூறி கேரளா உயர்நீதிமன்றத்தில் நடிகை லட்சுமி மேனன் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். இதனை விசாரித்த கேரளா உயர்நீதிமன்றம், வரும் செப்டம்பர் 17-ஆம் தேதி வரை நடிகை லட்சுமி மேனனை கைது செய்ய இடைக்கால தடை விதித்து உத்தரவிட்ட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Kerala High Court has issued an interim stay on the arrest of actress Lakshmi Menon


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!


செய்திகள்



Seithipunal
--> -->