ராஜா ராம் மோகன் ராய் அவர்கள் பிறந்ததினம்!
The day Raja Ram Mohan Roy was born
'இந்திய மறுமலர்ச்சியின் தந்தை' திரு.ராஜா ராம் மோகன் ராய் அவர்கள் பிறந்ததினம்!.
இந்தியாவில் சாதி, மத, சமூக சீர்திருத்தத்தை ஏற்படுத்திய ராஜா ராம் மோகன் ராய் 1772ஆம் ஆண்டு மே 22 ஆம் தேதி வங்காளத்தில் பிறந்தார்.
இவர் சமூக ஏற்றத்தாழ்வுகள் மற்றும் முறைகேடுகளுக்கு எதிராக செயல்பட்டார். இதன்மூலம், அனைத்து மக்களும் சாதி, மத வித்தியாசமின்றி ஒன்றாக இணைந்து ஒரே இறைவனை வழிபட வழிவகுத்தார்.
இந்தியாவின் முதல் சமூக, மத சீர்திருத்த இயக்கமான பிரம்ம சமாஜத்தை நிறுவினார். குழந்தைத்திருமணம், சிசுக்கொலை, தீண்டாமை, பெண்களுக்கு முழு உரிமை என பல போராட்டங்களை நடத்தினார். சதி என்னும் உடன்கட்டை ஏறும் சமுதாயக் கொடுமையை ஒழிக்க இவர் பெரிதும் பாடுபட்டார்.

தற்போது உலகம் முழுவதும் வலியுறுத்தப்படும் பெண்ணுரிமைக்காக 200 ஆண்டுகளுக்கு முன்பே போராடிய இந்திய மறுமலர்ச்சியின் தந்தை ராஜா ராம் மோகன் ராய் தனது 61வது வயதில் 1833 செப்டம்பர் 27 ஆம் தேதி அன்று மறைந்தார்.
English Summary
The day Raja Ram Mohan Roy was born