போக்சோ வழக்கு! சிறுமியை கர்ப்பமாக்கிய காதல் சிறுவன்...! போலீசார் விசாரணை...
POCSO case The boy who got the girl pregnant in love Police investigation
நீலகிரி ஊட்டியில் ஒரு தம்பதியின் 17 வயது மகள் ஒரு கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.காம்.(B.com ) படித்து வருகிறார். தற்போது கல்லூரியில் கோடை விடுமுறை என்பதால் வீட்டிலிருந்து வந்தார்.
இந்நிலையில், ஊட்டியில் 17 வயது சிறுமி 11-ம் வகுப்பு படித்த போது, அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவனுடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது காதலாக மாறியுள்ளது.

இதில், இருவரும் தங்கள் கைபேசி எண்களை பரிமாறிக்கொண்டு நீண்ட நாட்களாக பேசி வந்தனர். இந்நிலையில் சிறுமியின் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அங்கு சென்ற சிறுவன், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.
இதனால், சிறுமிக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து சிறுமியை பெற்றோர் ஊட்டி அரசு மருத்துவமனை கூட்டிச்சென்றனர்.பரிசோதனையின் பொது, சிறுமி 6 மாத கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், இதுகுறித்து ஊட்டி மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.அதன் பேரில் காவல் துணை சூப்பரண்டு நவீன், இன்ஸ்பெக்டர் நித்யா தலைமையிலான காவலர்கள் சிறுவன் மீது ''போக்சோ'' சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியிலபெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
POCSO case The boy who got the girl pregnant in love Police investigation