அரசு துறைகளில் 615 பணியிடங்கள்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
615 vacancies in government departments TNPSC announcement
2025-ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு மூலம், ஒரு நிதியாண்டிற்கு 615 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இந்து சமய அறநிலையத்துறை, நெடுஞ்சாலைத் துறை, உள்ளிட்ட வெவ்வேறு துறைகளில் கலியாக உள்ள 615 தொழில்நுட்ப காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி-ன் இணையதளத்தின் வாயிலாக மே மாதம் 27 ஆம் தேதி முதல் விண்ணப்பத்தைப் பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமர்ப்பிக்க ஜூலை 25 ஆம் தேதி கடைசி நாள் , ஆகஸ்ட் 4 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெற உள்ளன. இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: -
ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு 2025, உதவிப் பொறியாளர் உள்ளிட்ட 47 பதவிகளுக்கான 615 காலிப்பணியிடங்களை நிரப்ப, ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு க்கான அறிவிக்கை, தேர்வர்கள் 27.5.2025 முதல் 25.6.2025 வரை இணையவழியில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.
தேர்வர்கள் தோ்வுக்கான கட்டணத்தை 'யுபிஐ' செயலி மூலம் செலுத்தலாம். கணினி வழித் தேர்வு 4.8.2025 முதல் 10.8.2025 வரை நடைபெறும்.
ஒரு நிதியாண்டிற்கு சராசரியாக 618 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 2025-ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு மூலம், ஒரு நிதியாண்டிற்கு (2025-2026) 615 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
English Summary
615 vacancies in government departments TNPSC announcement