சென்டாக் கலந்தாய்வு.. தலித் பழங்குடியின மாணவர்களின் இட ஒதுக்கீட்டை பாதுகாக்க வலியுறுத்தல்!
Sentak consultation Urging to protect the reservation for Dalit tribal students
உயர்கல்வியில் தலித்,பழங்குடி மாணவர்களின் இட ஒதுக்கீட்டு உரிமை பறிக்கப்படுவது குறித்து ஆதிதிராவிடர் நலத்துறை செயலாளர் முத்தம்மா அவர்களிடம் முற்போக்கு மாணவர் கழகத்தின் சார்பில் புகார் மனு அளித்தனர்.
அப்போது அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:புதுச்சேரி மாநிலத்தில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களுக்கான மாணவர் சேர்க்கையில் தலித் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு பாதிக்கப்படும் வகையில் தரவரிசை பட்டியல் வெளியிடப்படுகிறது.அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள முதுகலை மருத்துவ படிப்பில் சேரும் தலித் மாணவர்களுக்கு clinical based course பாடப்பிரிவுகள் போதிய அளவில் ஒதுக்கீடு செய்யப்படுவதில்லை.
அதாவது MD Clinical COURSES
1.General medicine
2.pediatrics
3.Dermatology
4.Anestiology
5.Emergency medicine
6.Gediatrics medicine
7.psychatrics
8.pulmonology
மேற்கண்ட பாடப்பிரிவுகளில் தலித் மாணவர்களுக்கு ஆண்டுவாரியாக விகிதாசார அடிப்படையில் எத்தனை இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன என்பதை ஆய்வு செய்தால் இதில் உள்ள அநீதியை புரிந்து கொள்ள முடியும்.
குறிப்பாக தலித் மாணவர்களுக்கு பெரும்பாலும் Non clinical course பாடப்பிரிவுகளை ஒதுக்கீடு செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அதாவது
1.Anatomy
2.physiology
3.pathology
4.Microbiology
5.pharmacology
6.Forensic medicine
7.community medicine
8.Rediology
9.Biochemistry
போன்ற Non clinical course பாடப்பிரிவுகள் அதிகமாக ஒதுக்கீடு செய்யப்படுகிறது.மருத்துவத் துறையில் அதிக முக்கியத்துவம் வாய்ந்த பாடப்பிரிவுகள் தலித் மாணவர்களுக்கு புறக்கணிக்கப்பட்டு, தலித் அல்லாத மாணவர்களுக்கு அதிகமாகவும் ஒதுக்கீடு செய்யப்படுவது சமூக நீதிக்கு எதிரானதாகும்.எனவே தலித் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு அவர்களின் இட ஒதுக்கீட்டிற்கு ஏற்றார் போல் clinical based பாடப்பிரிவுகளை ஒதுக்கீடு செய்ய தாங்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
அதேபோல் தலித் மற்றும் பழங்குடியின மாணவர்களின் இட ஒதுக்கீட்டு இடங்களை பறிக்கும் வகையில் Dereserve முறையை புதுச்சேரி அரசின் சென்டாக் நிர்வாகம் கையாண்டு வருகிறது.முதுகலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் போன்ற உயர்கல்வி சார் படிப்புகளில் தலித் மற்றும் பழங்குடியின மாணவர்கள் MCI நிர்ணயித்த cut of மதிப்பெண்ணை விட குறைவான மதிப்பெண் எடுத்துள்ளனர் என்று காரணம் காட்டி கலந்தாய்வில் இருந்து அவர்கள் தகுதி இழப்பு செய்யப்படுகின்றனர். இதனால் முதுகலை மருத்துவ படிப்பில் போதிய அளவில் தலித் பழங்குடியின மாணவர்கள் சேர முடியாமல் போவதால் இந்த விவகாரத்தை கருத்தில் கொண்டு
SC /ST மாணவர்களின் CUT OF மதிப்பெண்களை MCI நிர்வாகம் ஆண்டு தோறும் குறைக்கின்றது. அவ்வாறு குறைக்கும் பொழுது தகுதியுடைய மாணவர்களை கலந்தாய்விற்கு அழைக்காமல் அந்த இடங்கள் பொதுப்பிரிவுக்கு மாற்றப்பட்டு விட்டதாகவும் எனவே அதில் இட ஒதுக்கீட்டை தலித் மாணவர்கள் கோர முடியாது என்று சென்டாக் நிர்வாகம் கூறி வருகிறது. இதனால் முதுகலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் போன்ற படிப்புகளில் தலித் பழங்குடியின மாணவர்களின் இட ஒதுக்கீடு நுட்பமான முறையில் பறிக்கப்படுகிறது.
புதுச்சேரி அரசின் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் லாஸ்பேட்டை தட்டாஞ்சாவடி காரைக்கால் கோவில்பத்து ஆகிய இடங்களில் இயங்கி வந்த மாணவர் விடுதிகள் கடந்த நான்கு ஆண்டுகளாக மூடப்பட்டு கிடைக்கின்றது. இதனால் கிராமப்புற பகுதிகளை சார்ந்த தலித் மற்றும் பழங்குடியின மாணவர்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். மூடப்பட்டுள்ள மாணவர் விடுதிகள் புதிதாக கட்டி முடிக்கப்படும் வரை தனியார் கட்டடங்களை வாடகைக்கு எடுத்து விடுதி மாணவர் சேர்க்கையை எப்போதும் போல் நடத்துவதற்கு துறை சார்ந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென முற்போக்கு மாணவர் கழகத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம் என அந்த மனுவில் புதுச்சேரி முற்போக்கு மாணவர் கழகம் விடுதலை சிறுத்தைகள் மாநில செயலாளர் இரா.தமிழ்வாணன் தெரிவித்துள்ளார்.
சந்திக்கும் போது முற்போக்கு மாணவர் கழகத்தின் மாநில துணை செயலாளர் Vadhanur Sivachandiran மற்றும் உசுடு தொகுதி விசிக நிர்வாகி Ilangovan Ilango ஆகியோர் உடன் இருந்தனர்.
English Summary
Sentak consultation Urging to protect the reservation for Dalit tribal students