கோவையில் பரிதாபம்! - உணவு தேடி வந்த யானைக்கு மின்சார மரணம் ...! நடந்து என்ன ...?
Pity Coimbatore elephant searching food died electrocution What happened
கோவை மாவட்டம் மாட்டம், தொண்டாமுத்தூர் அருகே நடந்த துயர சம்பவம் அனைவரையும் உலுக்கியுள்ளது. உணவும், தண்ணீரும் தேடி கிராமப்புறம் நோக்கி வந்த சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் யானை, மின்சாரம் தாக்கி உயிரிழந்தது.
அந்த பகுதியில் விவசாய நிலத்தில் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டிருந்த மின்கம்பி யானை சாய்த்தபோது, திடீரென அந்த கம்பம் அதன் மேல் விழுந்தது. உடனடியாக மின்சாரம் தாக்கியதில், யானை சில நொடிகளில் பரிதாபமாக உயிரிழந்தது.

இந்த தகவல் அறிந்த வனத்துறை அதிகாரிகள் விரைந்து சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டனர். பின்னர், யானையின் உடலை பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் சென்று, மரண காரணத்தை உறுதிப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இச்சம்பவம், மின்கம்பிகள் மற்றும் மின்சார வேலி அமைப்புகள் காட்டு விலங்குகளின் உயிருக்கு எவ்வளவு ஆபத்தானவை என்பதை மீண்டும் நினைவூட்டியுள்ளது.
English Summary
Pity Coimbatore elephant searching food died electrocution What happened