டொனால்ட் ட்ரம்ப் அரசால் அவதியுறும் அமெரிக்கா; ஒவ்வொரு அமெரிக்கர்கள் தலையிலும் 01 கோடி ரூபாய் கடன்..? - Seithipunal
Seithipunal


உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடு அமெரிக்கா. ஆனால் அந்நாட்டில் தேசியக் கடன் 3,339 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. அதன்படி, ஒவ்வொரு அமெரிக்கரின் தலையிலும், 1 கோடி ரூபாய் கடன் சுமை உள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் பொருளாதார மந்தநிலை ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியாகின. இந்நிலையில் அந்நாட்டின் தேசியக் கடனும் வரலாறு காணாத அளவில் உயர்ந்திருப்பது அதிர்ச்சியயை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, இது குறித்து அமெரிக்க நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

'நாட்டின் தேசியக் கடன் 3,339 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாகம், இதன்படி ஒவ்வொரு அமெரிக்கரின் தலையிலும், 1 கோடி ரூபாய் கடன் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

கடந்த 2024 நவம்பரில் நாட்டின் மொத்தக் கடன் தொகை, 3,163 லட்சம் கோடி ரூபாயாக இருந்த நிலையில், இது இந்தாண்டு ஆகஸ்ட் மாதத்தில், 3,250 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இரண்டே மாதங்களில், ஒரு டிரில்லியன் டாலர், அதாவது 88 லட்சம் கோடி ரூபாய் கடன் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தாண்டு ஜனவரியில், அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் 02 வது முறையாக பதவியேற்ற பின், 02 டிரில்லியன் டாலர் அளவுக்கு கடன் உயர்ந்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது. அமெரிக்காவின் கடன் தொகை சீனா, இந்தியா, ஜப்பான், ஜெர்மனி, பிரிட்டன் ஆகிய பெரிய நாடுகளின் பொருளாதாரங்களுக்கு சமமாக உள்ளது.  

அமெரிக்க அரசின் செலவீனங்களுக்கும், வருவாய்க்கும் இடையிலான இடைவெளி வேகமாக அதிகரித்து வருவதே இதற்கு முக்கியக் காரணம் என கூறப்படுகிறது. மேலும் டிரம்பின் 'ஒன் பிக் பியூட்டிபுல் பில்' சட்டப்படி அதிகளவு வரிக் குறைப்பு செய்ததும் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

இதனை தொடர்ந்து, அமெரிக்காவின் பொருளாதார ஆலோசனை அலுவலக கணிப்பின்படி, 2047-ஆம் ஆண்டுக்குள் நாட்டின் மொத்தக் கடன், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 200 சதவீதத்தை எட்டக்கூடும் என்று எதிர்வு கூறப்படுகிறது.

தற்போதைய புள்ளி விபரங்களின்படி, நம் நாட்டின் (இந்தியாவின்) மொத்தக் கடன் 171.78 லட்சம் கோடி ரூபாயாகும். இதன்படி ஒவ்வொரு இந்தியர் மீதான கடன், 4.8 லட்சம் ரூபாயாகும்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Every American has a debt of Rs 1 crore


கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?




Seithipunal
--> -->